சனி, 21 ஆகஸ்ட், 2021

பரிசுத்தம் என்ற நினைவால் பிரிவு

பரிசுத்தம் என்ற நினைவால் பிரிவு
by : Eddy Joel Silsbee

 



சமாதானத்தின் தேவன் தாமே நம்மை வழிநடத்துவாராக.

சபையில் ஒருவர், நமக்கு விரோதமாய் தவறு செய்தால் சட்டென்று கோபித்துக்கொள்கிறோம்.

அதோடு நில்லாமல் அவருடைய சங்காத்தமே வேண்டாம்.. நமக்கு ஒத்தேவராது என்று ஒதுங்கி முழுத் தொடர்பையும் படிப்படியாய் குறைத்து விடுகிறோம்.

ஏதோவொரு வகையில் இந்த நடவடிக்கை நமக்கு சமாதானத்தை தந்தாலும்… வேதமோ அதற்கு மாறாகவே சொல்லுகிறது.

நம்முடைய தகப்பன் தான் அவர்களுக்கும் தகப்பன்.

நாம் எல்லோரும், ஒரு தகப்பனின் பிள்ளைகள்.

ஆகவே,
பிரச்சனை வந்தாலும்,
உருவானாலும்,
நேருக்கு நேராய்,
பட்டென்று முகத்தில் அடிப்பது போல கேட்டு விடாமல், பொறுமையாய் அவர்களிடத்தில் நாம் எடுத்துச் சொல்லி சரி செய்ய வேண்டுமாம் கலா. 6:1

பூரணமாய் வளர்ந்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டிருந்த கொரிந்து சபையானது (1கொரி 1:5-7);
பிரிவினை,
உபதேச கோளாறு,
விபசாரம்,
விக்கிரகங்களுக்கு மதிப்பளித்தல்,
காணிக்கையில் அறியாமை,
தெய்வீகம் என்று நினைத்து தொழுகையில் உளறுவது,
பாடுவதில் குழப்பம் என்ற அனைத்து ஒழுங்கீனமும் கொண்டிருந்ததை பவுல் பட்டியல் இட்டாரே !!

வளர்ந்து விட்டோம் என்ற எண்ணம் நமக்கிருந்தால்,
உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை இழந்துவிடுவோம்.

கொஞ்சம் கஷ்டம் தான்..
கீழ்படிவதற்கு நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம்.

ஒரே ஒரு படியை நன்கு அறிந்து,
ஒரு நாளுக்கு ஒன்று என்று சரியான முறையில் கிறிஸ்தவத்தில் வளர்ந்தாலே,
பெரிய வெற்றியை வாழ்க்கையில் தேவன் நிச்சயம் தருவார்.

ஒருவரையொருவர் நேசிக்கப் பழகுவோம்.

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/0WzFAq6r48E
 

Please Subscribe & Watch our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக