வியாழன், 28 மார்ச், 2019

Daily Dose 28-3-19

{*எழுதியவர் : எடி ஜோயல்*  +968 93215440 }


கிருபை நிறைந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

எத்தனை முறை ? பத்தோ, நூறோ, ஆயிரமோ, இலட்சமோ கோடி முறை கூட இருக்கலாம் -  நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இத்தனை முறை கர்த்தரின் கட்டளையை நாம் மீறியிருந்திருக்கலாம்.

ஒவ்வொன்றுக்கும் முறையே, வரிசை வரிசையாக கணக்கு வைத்து ஆண்டவர் நமக்கு தண்டனையை கொடுத்து இருந்தால்? என்னவாகியிருக்கும்?

எதையுமே பெரிதாக நினைக்காமல், போகட்டும் போகட்டும் என்று இன்று வரை அவர் பொறுமையாய் இருந்து – ஆசீர்வதிக்கவும் செய்கிறார்..

பரத்துக்கு விரோதமாக நாம் செய்த எத்தனையோ பாவங்களை மன்னித்து, நம்மை தண்டிக்காமல் தேவன் விட்டார்.

ஆனால் நாமோ, நமக்கு விரோதமாக செய்யபடும் இவ்வுலக மீறுதல்களை மற்றவர்களுக்கு மன்னிக்க யோசிக்கிறதாலேயோ என்னவோ – எப்போ பார்த்தாலும் வீட்டில் சண்டையும், அழுகையும் பற்கடிப்பும் வியாதியும் வறுமையும்  மீளமுடியாத கடன்களும் குடிகொண்டு இருக்கிறது..

எப்பொழுது ஜெபித்தாலும் நமக்கு தேவன் இறங்குவது போல – நாமும் மற்றவர்களின் மீது இருக்கும் பகையை மறந்து - புன்னகையோடு எப்போதும் எல்லோரையும் பார்த்து உள்ளம் குளிர சந்தோஷமாய் எல்லோரிடமும் தயவாய் இருப்போம்... அது மற்றவர்களுக்கு மாத்திரம்  அல்ல...நம்முடைய வாழ்வையும் ஆசீர்வாதமாக மாற்றும். 

நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, .. அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். நீங்களும் ... மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். (மத் 18:33-35)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229


{*written by : Eddy Joel*  +91 8144 77 6229}


Greetings to you in the name of our Gracious Lord Jesus Christ.

Tens, Hundreds, Thousands, Million times we might have transgressed the Law of God till date.

What would be the result, if God punishes us count by count on every single mistake?

Instead of punishing on every transgressions, He not only pardons us but moreover extends His blessings till date..

Is it not because we did not pardon or endure the simple mistakes and iniquity of our own brother, sister, husband or wife, that we are experiencing problems, difficulties, cries, fights, severe poverty etc in our life?, while our sins against Kingdom of Heaven was pardoned by our God?

Our Heavenly father answers our prayers whenever we plead to Him, likewise let us also forgive others and extend your hearty love and affection to everyone… this is not to bring happiness on others, but to your OWN LIFE.

Mat 18:33-35  And should not you have had mercy on your fellow servant, as I had mercy on you? And in anger his master delivered him to the jailers, until he should pay all his debt. So also my heavenly Father will do to every one of you, if you do not forgive your brother from your heart."

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக