#698 - *மனுஷ குமாரன் இயேசு கிறிஸ்து ... மனுஷகுமாரன் சாயலானவர் யார்? இதை விளக்க முடியுமா ??*
இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ,
மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார். அவர்
நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில்
கொண்டுவரப்பட்டார். தானியேல் 7:13
*பதில்*
தானியேலுக்கு
வெளிப்படுத்தப்பட்ட இரட்சகர (இயேசு கிறிஸ்து) குறித்த தரிசனம் இது.
பூமியில் உள்ள
அதிகாரங்கள் *நித்தியமாக மேசியாவின் கைகளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறது* என்பதை வெளிப்படுத்துகிறது. (தானி 2:44)
சிலுவை
மரணத்திற்கு பின்னர் பூமியலும் வானத்திலும் சகல அதிகாரமும் தனக்கு கொடுக்கப்பட்டிருப்பதை
இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார் (மத். 28:18)
சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது;
அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும் (தானி. 7:14)
இயேசு
கிறிஸ்துவிற்கு கொடுக்கப்பட்ட இந்த இராஜ்ஜியத்தின் சகல ஆளுகையையும் துரைத்தனத்தையும்
வல்லமையையும் கர்த்தத்துவத்தையும் மனுஷகுமாரனான கிறிஸ்துவானவர் பிதாவாகிய
தேவனிடத்தில் தன்னுடைய வருகையில் (இந்த பூமியை
நியாயந்தீர்க்க வரும்போது) ஒப்புக்கொடுக்கிறார் – 1கொரி. 15:24
எல்லா
ஆளுகையும் கிறிஸ்துவின் கரத்தில் இருப்பதால் தான் இராஜ்ஜியத்தில் உள்ள (சபையில்) கிறிஸ்தவர்களாகிய
நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் –
எபே. 6:10-13, கொலோ.
1:18, மத்.
16:18-19
மேலும்
அதே அதிகாரத்தில் 15ம் வசனம் துவங்கி 27ம் வசனம் வரைக்கும் - இந்த அதிகாரத்தில்
குறிப்பிடப்பட்ட தானியேலின் தரிசனத்திற்கான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறதை
இங்கு கோடிட்டு எழுதுகிறேன்.
தானி. 7:15 தானியேலாகிய
நான் என் தேகத்தினுள் என் ஆவியிலே சஞ்சலப்பட்டேன்; என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கப்பண்ணினது.
தானி. 7:16 சமீபத்தில்
நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய்,
இதன் பொருள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன்;
அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச் சொன்னது என்னவென்றால்:
தானி. 7:17-18 அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு
ராஜாக்கள். ஆனாலும் உன்னதமானவருடைய
பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதா
காலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான். (வ 1-6)
தானி. 7:21-23 *நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும்*,
நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு,
பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டளவும்,
இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே
யுத்தம்பண்ணி, அவர்களை மேற்கொண்டது
என்று கண்டேன். அவன் சொன்னது:
நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை
எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்.
(வ7-8)
தானி. 7:24-25 அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து
ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்;
அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களை தாழ்த்திப்போட்டு, உன்னதமானவருக்கு
விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை
ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்;
அவர்கள் ஒரு காலமும். காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
தானி. 7:26-27 ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச்
சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள். வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும்
ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக்
கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.
மனுஷகுமாரன் என்பது இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. அவரின் நிலையான இராஜ்ஜியத்தை
குறித்த தரிசனத்தை தானியேல் பெற்றார். அது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவேறியதை
புதிய ஏற்பாட்டின் முதல் 4 சுவிசேஷ புத்தகங்களிலும் காண்கிறோம்.
நித்திய இராஜ்ஜியமாகிய சபையை தேவன் கிறிஸ்துவின் மூலமாக
நியமித்தார். ஞானஸ்நானத்தின் மூலம் அந்த சபையில் (எக்லீஷியா என்ற கிரேக்க வார்த்தையான
கிறிஸ்துவின் சரீரத்தில்/சபையில்) நாம் சேர்க்கப்பட்டிருக்கிறோம் (அப். 2:47).
*சாராம்சம்*:
"நித்திய ராஜ்யத்தை"
நிறுவுதல் (அதாவது சபை) ...
ரோமானியப் பேரரசின் நாட்களில் நிகழும் - தானி. 2:44; லூக்கா1:30-33;
மாற்கு 1:14-15
இயேசு பரலோகத்திற்கு ஏறியபோது தொடங்கியது - தானி. 7: 13-14; அப். 1:9; அப்.
2:36; எபே. 1:20-23; 1 பேதுரு 3:22; வெளி. 1:5,9
ஆதியில் பெரும் துன்புறுத்தல்களை
அனுபவித்தவர்கள் - தானி. 7:25; வெளி. 1: 9; 2:10; 17:14
மரணம் வரைக்கும் அந்த
நாட்களில் விடாமுயற்சியுடன் இருந்த பரிசுத்தர்கள், பரலோகத்தில் கிறிஸ்துவுடன் தொடர்ந்து ஆளுகை செய்கிறார்கள் (அதாவது,
"ராஜ்யத்திற்குறியவர்கள்") - தானி. 7:18; 2தீமோ. 4:17-18; வெளி. 20:4
தானியேல் மற்றும்
யோவான் இருவருக்கும் முன்னறிவிக்கப்பட்டபடி ரோமானிய
சாம்ராஜ்யத்தின் மீது சபையின் இறுதி ஜெயம் நிறைவேறியது.
இந்த நிறைவேற்றம் நம்மை இயேசு கிறிஸ்து திரும்பி நம்முடைய பிதாவாகிய தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கும் காலம் வரை நம்மை உண்மையுள்ளவராகவும்
உத்தமர்களாகவும் பரிசுத்தர்களாகவும் விசுவாசத்தில் வைராக்கியமள்ளவர்களாகவும் இருக்க ஊக்குவிக்கட்டும் 1கொரி. 15:23-26.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக