சனி, 30 மார்ச், 2019

#76 - கிறிஸ்தவரல்லாதவருக்கு நம் தேவனை எப்படி விவரிப்பது?

#76  - *கிறிஸ்தவரல்லாதவருக்கு நம் தேவனை எப்படி விவரிப்பது?*

*பதில்:*
அருமை சகோதரருக்கு நீங்கள் கேட்ட கேள்வி அவ்வளவு சுருக்கமாக சொல்லவே முடியாது.  யாருமே முழுமையாக சொல்லிவிடவும் முடியாது !!

என்னுடைய பாணியில் கீழே முடிந்த அளவு சுருக்கி எழுத முயற்சிக்கிறேன். தேவன் என்பது வடமொழி.
கடவுள் என்பது தமிழ் வார்த்தை.

கடவுள் என்பவர் :
நம்மை படைத்தவர்
நமக்கு உயிர் தந்தவர்
சர்வ அதிகாரமும் படைத்தவர்
உயிருள்ளவர்

அவரை ஒரு இடத்தில் நாம் பிடித்து வைக்க முடியாது
அவரை போல நாம் படைக்கப்பட்டோம் (ஆதி. 1:26)

அவருக்கென்று தனி பெயர் கிடையாது.
அவரே பொியவராக இருப்பதால் அவருக்கு யாரும் பெயர் சூட்ட முடியாது.
அவர் தன்மையை கொண்டு நாம் அவரை அழைக்கிறோம்.
அவரை நாம் உருவகப்படுத்தி அடையாளப்படுத்த முடியாது / கூடாது.

இந்த வாழ்க்கைக்கு இந்த பூமியில் முடிவு உண்டு.  நம் உயிருக்கு மறுசுழற்சி (மறுஜென்மம்) கிடையாது. நம் அனைவரையும் கடவுள் ஒரு நாள் உயிரோடு எழுப்புவார் - அன்று நாம் நடந்து கொள்ளும் எந்த நடவடிக்கைகளுக்கும் அவருக்கு கணக்கு கொடுக்கவேண்டும்.  அவருக்கு பிரியமானவர்களாய் நாம் வாழ்ந்தோம் என்பது ஊர்ஜீதமானால் நமக்கு மோட்சம். இல்லையென்றால் நரகம்.
அதற்குபின் நம் அனைவரது வாழ்க்கையும் - மோட்சதிலானாலும் நரகத்திலானாலும் முடிவு இல்லாதது. அதாவது நித்திய சந்தோஷம் அல்லது நித்திய வேதனை.

10 அல்லது 20 வருடம் சந்தோஷமாக வாழ வாலிப காலத்தில் கடினமாய் உழைக்கிறோம்.
ஆனால் நித்திய காலமாக சந்தோஷமாக வாழ கடவுளின் உத்தரவுபடி சரியாய் வாழ்ந்தால் - நித்திய சந்தோஷம்.

எது சரியான வாழ்க்கை என்பதை சரியாக புரிந்து கொள்ள வேதாகமத்தில் மாத்திரமே விடை காணமுடியும். இயேசு தான் அதற்கான வழியை காண்பித்தார்.  மற்ற எல்லா மதமும் - நாம் செய்த குற்றத்திற்கு தண்டனை எது என்று சொல்கிறது. இயேசு மாத்திரம் தான் நாம் செய்த குற்றத்தில் இருந்து விடுதலையெ பெற்று தருகிறார்.

கிறிஸ்தவம் என்பது மார்க்கம் - கிறிஸ்தவ மதம் அல்ல.
அதாவது மோட்சத்திற்கு போவது எப்படி என்று சொல்லி தரும் வழி (மார்க்கம்)

------

(கிறிஸ்தவர்களுக்கு)அவருடைய தன்மையின் மூலமாக தான் அவரை பல வேளைகளில் அடையாளபடுத்திக்கொள்கிறோம். 

உதாரணத்திற்கு : 

சர்வ வல்லமையுள்ளவர் {எபிரேய பாஷையில் எல்ஷடாய்) (யாத். 6:3)
இருக்கிறவராகவே இருக்கிறேன்  / நான் கர்த்தர் (யெகோவா) (யாத். 3:14)
எல்லாம் வல்ல தேவன் (ஏல் கிபோர்)
சேனைகளின் கர்த்தர் (யெகோவா சாபோத்)
இப்படி ஏராளமான தன்மைகளை வைத்து சொல்லிக்கொண்டே போகலாம். பொிய பட்டியலே இருக்கிறது.

ஒரளவிற்கு முகவுரை கொடுத்திருக்கிறேன். பிரயோஜனமாயிருக்கும் என்று நம்புகிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக