வியாழன், 27 டிசம்பர், 2018

Daily Dose 27-12-18

நேற்றும் இன்றும் என்றும் மாறா நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கிறிஸ்துவை நோக்கி மனமாறியதும் யோவானிடம் அரசாங்க ராணுவ ஊழியர்களான போர் சேவகர்கள் கேட்ட கேள்வி – இனி நாங்கள் எப்படி நடக்க வேண்டும் என்று?

ஒழுக்கத்திற்கும், கடைமையை செய்வதற்கும் பயிற்றுவிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு, கிறிஸ்துவின் அருகாமையில் வரும்போது இன்னும் சரி செய்யப்படவேண்டியுள்ளது என்று உணர்த்தப்பட்டனர்.

நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்று யோவான் ஆலோசனை கூறினார். லூக் 3:14

மனம்திரும்புதலுக்காய் மாத்திரம் அல்ல – பாவ மன்னிப்பிற்காக நாம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட சூழ்நிலையில், நம்மில் எப்படி பற்ற மாற்றங்கள் வந்திருக்கிறது?

வசனத்தை சொன்னால் :
- சலிப்பு வருகிறது.
- பாரம்பரியம் முன்னுரிமை எடுக்கிறது.
- செய்வது தவறு என்று சொல்லும் வேத வசனத்திற்கு புதிய அர்த்தம் தோன்றுகிறது.

கீழ்படிய வேண்டும் என்கிற நோக்கமே இருக்கவேண்டும்.

நமக்கு கட்டளை கொடுத்தது
– பரலோக தேவன், சகல வல்லமையுள்ள கடவுள், உன்னதமானவர், ராஜாதி ராஜா, கர்த்தர் என்று சொல்லி முடியாத மாட்சிமை உள்ளவர். அவர் வாக்குக்கு நாம் செவி கொடுக்க மறுக்கவே கூடாது.

தேவன் நமக்கு இன்னும் கீழ்படிதலின் இருதயத்தை தருவாராக.

-*-*-*-

[இந்த அனுதின குறுஞ்செய்தியை அமைதியாய் படித்துக்கொண்டு இருக்கிறவர்களும், அனுப்பப்படுவதை விரும்புகிறவர்களும் தயவு செய்து இந்த மாத கடைசிக்குள் ஒரே ஒரு முறை இந்த பணி தொடர தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.  

பதில் பெறப்பட்ட எண்களுக்கு மாத்திரம் வரும் 2019லிருந்து தினசரி செய்தி அனுப்பப்படும்]


*Eddy Joel*

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

Greetings to you in the name of our Lord Jesus Christ, who never changes.

Military soldiers, obviously Government servants asked Baptist John when they repented that what  should they do?

They were trained to do things rightly and responsibly. But understood their unworthiness when they were brought near to the Christ.

John advised them “Do violence to no man, neither accuse any falsely, and be content with your wages” Luke 3:14

We are baptized not only to repent but for the remission of sins. Have we seen the changes in ourselves?

If the scriptures are read:
We get boredom
Culture takes priority
We find new meanings when scripture points us any issues.

Aim to obey always without reason.

We received the scriptures from – The Heavenly God, Almighty God, The Most High, King of Kings, The Lord…never ending list of Titles for HIM.. We should NEVER resist HIS instruction.

May the Lord gives us obeying spirit.

*Eddy Joel*
+968 93215440


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக