வியாழன், 29 நவம்பர், 2018

Daily Dose 29-11-18

ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கடைசி காலம் வரப்போகிறது என்று ஏமாந்து விடகூடாது. பல சபை மேடைகள் தீர்க்கமாய் நிரூபித்து கொண்டிருக்கிறது !!

எத்தனை நாடுகள் நான் சுற்றி இருக்கிறேன், 
எத்தனை ஆயிரங்கள் கலந்து கொண்டார்கள்,
எத்தனை ஊர்களில் போஸ்டர் ஒட்டினார்கள்,
எத்தனை பேர் சாட்சி சொன்னார்கள்,
எத்தனை அற்புதங்கள் நடந்தது,
எப்படி இருந்த நான் இப்போ எப்படி இருக்கேன் என்று தன் துதி பாடி, கதை சொல்லி, ஊர் பாட்டு பாடி, பழமொழிகள் பேசி, ஜோக் அடித்து, இடையிடையே அல்லேலூயா சொல்ல சொல்லி, ஒரு மணி நேரத்தில் வெகு சில வசனத்தை சொல்லி ஆசீர்வதித்து ஆமென் வருகிறது..

வசனத்தின் விளக்கமோ, சத்தியத்தை போதிக்கவோ, வேதாகம இரகசியங்களின் உட்கருத்துக்களோ, ஜனங்களின் அன்றாட வாழ்வில் வசனத்தின் இன்றியமையாமையை எப்படி தாங்கி செல்வது என்றோ வலை போட்டு தேடினாலும் கிடைப்பது அரிதாயிருக்கிறது !!

வாலிபரும் கண்ணிகையரும் *தாகத்தோடு வீடு திரும்புகிறார்கள்* !!

... கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசை தொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.
... கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள்.  ஆமோஸ் 8:11-13 

நம் கடமையில் நாம் தவற வேண்டாம்..

*Eddy Joel* 

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee

Greeting you in the name of our Lord Jesus Christ, who is the bread of our Life.

It is a deception, if you still wait for the last days. Many denominational pulpits are already proving it !!

So pity to note the sermon hour filled in exploring with messages like :
How many countries he visited,
How many thousands gathered in his meetings,
In how many streets and districts his meetings were publicized, How many witnesses came out,
How many miracles witnessed, How he was magnified from low level, rocking songs in between, jokes, shouting and asking congregation to say Halleluah etc are the Sermon time we see these days !!

Neither scriptural explanation nor doctrinal teachings, nor elaborating tough scriptures, nor teaching to utilize and practicing scriptures in daily life etc are seen !!

Young men & women are returning with thirst !!

Behold, the days come, saith the Lord GOD, that I will send a famine in the land, not a famine of bread, nor a thirst for water, but of hearing the words of the LORD:  And they shall wander from sea to sea, and from the north even to the east, they shall run to and fro to seek the word of the LORD, and shall not find it. In that day shall the fair virgins and young men faint for thirst. Amo 8:11-13

The responsibility is on our shoulders.

*Eddy Joel* 

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக