சனி, 2 செப்டம்பர், 2023

#1199 - அப்போஸ்தலர் அல்லாத அனனியாவால் பவுலுக்கு எப்படி பரிசுத்த ஆவியைக் கொடுக்க முடிந்தது?

#1199 - *அப்போஸ்தலர் அல்லாத அனனியாவால் பவுலுக்கு எப்படி பரிசுத்த ஆவியைக் கொடுக்க முடிந்தது?*

அப்போஸ்தலர்களின் அடையாளங்களில் ஒன்று பரிசுத்த ஆவியின் வரங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது. அப்போஸ்தலர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் மீது கை வைப்பதன் மூலம் இது செய்யப்பட்டது (அப். 8:17-19) என்றால் அனனியா போய் சவுலின் மேல் கையை வைத்து: ( அப். 9:17) சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்று அப்போஸ்தலர் அல்லாத அனனியா மூலமாகவும் கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை பவுலுக்கு அளித்துள்ளதை விளக்கவும்.

*பதில்* : இந்த சம்பவம் பற்றிய மூன்று வசனப் பகுதிகளை கீழே குறிப்பிடுகிறேன்:

(1) அப். 9:15-18 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.

(2) அப். 22:10-16 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.  அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன், என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன். அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

(3)  அப். 26:16 இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.

மேலே குறிக்கப்பட்ட மூன்று இடங்களிலும் தனக்கு நடந்தவற்றை பவுல் பதிவிட்டதை காண்கிறோம். அதில் கவனிக்கும் போது, கிறிஸ்துவே அவரை நியமித்தார் என்றும் அவரை அப்போஸ்தலன் ஆக்கினார் என்றும் அறிகிறோம்.

இந்த நியமனம் மனிதனால் அல்ல, இயேசு மற்றும் பிதாவின் விருப்பத்தால் உறுதிப்படுத்தப்பட்டது (கலாத்தியர் 1:1) என்பது திண்ணம்.

இயேசுவே தனக்கு நேரடியாகப் போதித்ததாக பவுல் குறிப்பிடுகிறார். (கலாத்தியர் 1:11-12, 15-17).

அப்போஸ்தலர் 9 இல், இயேசு கிறிஸ்து அனனியாவுக்கு தரிசனத்தில் தோன்றும்போது, பரிசுத்த ஆவியைக் *கொடுக்கும்படி கட்டளையிடவில்லை*.

ஆனால் பவுலின் மீது கைகளை வைப்பதன் மூலம் பார்வையைத் திரும்பக் கொடுக்கிறார்.

அனனியாவும் சவுலிடம் ஒரு செய்தியை அறிவிக்கும்படிக்கு  தேவனிடமிருந்து அனுப்பப்படுகிறார்.

பவுல் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவார், கிறிஸ்துவிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொள்வார், ஞானஸ்நானம் பெறுவார் என்ற வாக்கியம் *ஒரு செய்தியின் ஒரு பகுதியாகும்*. அந்த வசனப்பகுதியை (அப். 9:17) மீண்டும் வாசித்துப் பார்க்கவும். (கலாத்தியர் 1:1; 1 தீமோத்தேயு 1:1,12,2:7).

பவுல் எப்போது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார், அது எப்போது நடக்கும் அல்லது நடந்தது என்று மற்ற எந்த வேத பகுதியிலும் குறிப்பாகச் சொல்லப்படவில்லை.

மற்ற அப்போஸ்தலர்களைப் போல - பவுல் எப்போது பரிசுத்த ஆவியைப் பெற்றார்? நமக்குச் சொல்லப்படவில்லை. நிச்சயம் அவருக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டார் என்பது நமக்குத் தெரியும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

மேலும், ஆவியானவரால் நிரப்பப்படுவதென்பது வேதாகமத்தில் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது:

- நமது வாழ்க்கையில் தேவனையும் அவருடைய போதனைகளையும் கொண்டிருத்தல் (அப்போஸ்தலர் 6:3-5; 11:24; 13:52; எபேசியர் 5:18).

- தேவனுடைய வல்லமை (அற்புத வரங்கள்) கொடுக்கப்பட்டது (அப்போஸ்தலர் 2:4; 13:9).

- தேவனுடைய வார்த்தைகளைப் பேசுவதற்கு உத்வேகம் பெற்றிருத்தல் (அப்போஸ்தலர் 7:55).

ஆகவே, இந்த கேள்வியில்  பவுலுடனான தொடர்பில் மேற்கோடிடப்பட்ட வசனப்பகுதியில் வரும் பரிசுத்த ஆவியின் நிரப்புதல் என்பது எதை குறிப்பதாகவுள்ளது என்பதில் தெளிவு இல்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

உதவி குறிப்பு : ஆலன் ஃபீஸ்டர் வலைதளம்,

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக