வியாழன், 15 நவம்பர், 2018

Daily Dose 14-11-18

எல்லா நன்மையினாலும் கிருபையினாலும் நம்மை நடத்துகிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

துப்பாக்கி வெடித்து அருகாமையில் நின்றவர்கள் பலியானதை பார்த்த போதும், மயிரிழையில் ஒதுங்கி போன வாகனங்களின் இரைச்சலிலும், உறங்கும் போது மாறி மாறி விழுந்த இடியையும் அனுபவித்தவர்களுக்கு ஓரளவிற்கு ஆபத்து நேரங்களில் “*அடைக்கலம்*” என்கிற வார்த்தைக்கு சரியான அர்த்தம் புரியும்.

உடலில் உள்ள நடுக்கமும், வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தை நாமே உணரும் போது - மறைந்து கொள்ள ஒரு அமைதியான இடமோ ஒரு பெரியவர் அந்த நேரத்தில் அணைத்து கொண்டாலோ ஆறுதலை உணருவோம்.

இராஜாவாக இருந்த போதும், ஏராளமான படைகள் இருந்த போதும் தாவீது இராஜா – தேவனை தான் தன் அடைக்கலம், அரண் என்று அண்டி இருந்தார்.
காலம் முழுவதும் போர் புரிந்தாலும், எப்போதும் வெற்றியும் கிடைத்த காரணம் – தேவனை மாத்திரம் சார்ந்து இருந்ததன் பலன்.

நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் எந்த நேரங்களிலும். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.  ஆகையால் பூமி நிலை மாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம் என்று இருப்போம். (சங் 46:1-3)

Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com

Greetings to you in the name of our Lord Jesus Christ who guides us thorough all goodness and Grace.

May by those who narrowly escaped from an accident and those who has personally witnessed a death by a bullet which passed thorough them will understand the word refuge rightly.

When some elderly strong men embrace you or found a quiet calm place while you were Shivering or as like you feel your own blood is hot… the word refuge is understood rightly.

Though David was a king, though he had armies and soldiers with him, he depended on the Lord as his refuge. He was successful in his career though he was fighting all his life only because his refuge was God!!

Whatever may be our situation is keep God is our refuge and strength, a very present help in trouble. Therefore will not we fear, though the earth be removed, and though the mountains be carried into the midst of the sea; Though the waters thereof roar and be troubled, though the mountains shake with the swelling thereof. (Ps 46:1-3)

Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக