செவ்வாய், 9 அக்டோபர், 2018

Daily Dose 5-10-18

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பரலோகத்தின் செழிப்பையும் தேவ குமாரன் என்னும் மேன்மையையும் விட்டு தன்னைத்தானே வெறுமையாக்கி ஏழ்மையான ஏழை கோலம் எடுத்து இந்த உலகத்திற்கு இயேசு கிறிஸ்து வந்தார்.

இப்படி ஒரு ஏழை எப்படி இரட்சகராய் இருக்கமுடியும் என்று பரிசேயர்களும் நியாயசாஸ்திரிகளும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

பட்டணத்தில் பிறந்து இருந்தாலும் பரவாயில்லை நாசரேத்து போல ஒரு குக்கிராமத்தில் இருந்து எப்படி வரமுடியும் என்று அவர்கள் மனம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தது (யோ 1:46)

பல நேரங்களில் நாமும் இப்படி சிந்தித்து விடுகிறோம்.

பணமோ, செழிப்போ, ஆர்ப்பாட்டமோ, பகட்டோ, படிப்போ, மொழியோ, உடையோ, பந்தாவோ ஒன்றையும் ஆண்டவர் கேட்பதோ, எதிர்பார்ப்பதோ அல்லது அப்படிப்பட்டவர்களுக்கு தனி ஆசீர்வாதாமோ கொடுப்பதும் கிடையாது.

உலக மேன்மைக்கான எண்ணம் நம்மை உலகத்தோடு கொண்டு போய் விடும்.

அவருக்கு வேண்டியது தாழ்மையான இருதயம் மாத்திரமே.

பூமிக்கானவைகள் அல்ல - மேலானவைகளை (பரலோகத்தில் உள்ளவைகளை) நாடுவோம் (கொலோ 3:1)

எடி ஜோயல்
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com

Greetings to you in the name of our Saviour Jesus Christ.

Leaving the prosperity of Heaven, predominance as Son of God etc, Jesus Christ chose and came to this world as poor and at necessitous stage.

Pharasees and lawyers did not accept Him as Saviour looking at His outfit as poor.

They were not ready to tolerate how come such worthy man comes from village like Nazereth? (John 1:46)

We too think like that many times.

Our Lord God has not set any criteria to bless after seeing those who dress well, saved enough money, well settled, multi-language spoken, high living standards etc.

Setting our mind to develop on worldly things will lead us to live in worldly.

God wants ONLY humble heart.

Not the worldly things – seek the things above !! (Col 3:1)

Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக