செவ்வாய், 2 அக்டோபர், 2018

Daily Dose 2-10-18

பிதாவாகிய தேவன் நம் ஒவ்வொருவரையும் இன்னும் பரிசுத்தப்படுத்துவாராக.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ் பழமொழி. ஆனால், அகத்தில் உள்ளத்தை வெளியே காட்டாமல் புன்முறுவலோடு இருக்க இந்த காலங்களில் எல்லோரும் பழகி விட்டோம்!!

சிறு பிள்ளைகள் கூட அதற்கு பயிற்சி பெற்றுக்கொள்கிறார்கள்!

இதன் விளைவு – சமுதாய சீர்கேடு.

ஆம், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தன்மை அதிகமாகிப்போனது. உண்மையையே பேசும் பக்குவம் மாறிவிட்டது. புன்முறுவலோடு எல்லோரிடமும் சிரித்து பேசினாலும், பலருடைய உள்ளமோ கொடூர குணத்தினால் நிறைந்து இருக்கிறது.

நேருக்கு நேர் முகத்திற்கு முகம் தீமையை எடுத்து சொல்லாமல் சிரித்து சிரித்து பேசி விட்டு – பின்னர் தவறாக விமரிசிப்பது “கபடு உள்ளம்”

கபட நாவை தேவன் வெறுக்கிறார்.
கபட நாவு உள்ளவர்கள் மரணத்திற்கு பாத்திரவான்கள் என்று வேதம் சொல்கிறது (ரோமர் 1:30-32, லேவி 19:16)

உள்ளத்தை உள்ளதென்றும் இல்லாததை இல்லாதது என்றும் சொல்ல பிரதிக்கினை எடுப்போம்.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com


May our Lord, the Father sanctify us more.

Tamil Proverb says – Face is the mirror of heart. But in current age almost everyone are practiced to keep face happy and hide the sadness in heart !!

Even children are trained to do so!

Resulting in communal corruption.

Yes, human is experienced now to hide what is in heart and speak the best only. Speaking the Truth is hidden now. They talk with smily face and backstab once the concern left. This is rude, bullying and ridiculous.

Talking with smily face and spitting him after he left shows the deception of heart.

God hates such attitude.
They are marked for death, Bible says (Rom 1:30-32, Lev 19:16)

Practice and decide to speak only what is in your heart.

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக