திங்கள், 13 ஆகஸ்ட், 2018

Daily Dose 12-8-18

நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனுடைய நாமத்திற்கே மகிமையும் கனமும் உண்டாவதாக.

இயேசு கிறிஸ்துவால் - வார்த்தையை சொன்னவுடன் இறந்தவரின் உயிர் வந்தது, அதட்டினால் காற்றும் கடலும் கீழ்படிந்தது, தொட்டதும் சுகம் கிடைத்தது, சாப்பாடும் திராட்சை ரசமும் உழைக்காமலே ஜெபத்தினால் அபிவிருத்தி ஆனது. இப்படி இன்னும் அடுக்க முடியும்.

இதில் ஏதாவது ஒன்றே ஒன்று நம் கையில் இருந்திருந்தால் நம் கால் கீழே இருக்குமா என்பது சந்தேகம் தான். தலையை விரித்து கொண்டு மற்றவர்கள் எல்லோரையும் ஆட்டுவித்து இருப்போம்.

இயேசுவோ அதை எந்த ஒரு இடத்திலோ, சூழ்நிலையிலோ  தன்னை குறித்து மேன்மையாக சொல்லிக் கொள்ளவில்லை. அப்படி சொன்னவர்களையும் வேண்டாம் என்றார். (பிலி 2:6-8, லூக் 4:41)

தாழ்மையாய் இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பாராட்டுக்கள் மாத்திரம் அல்ல,  வெறுப்புகளும், அவமானங்களும் சில வேளைகளில் – “தான் யார்” என்பதை நிரூபிக்க  தோன்றும்.

இயேசு கிறிஸ்துவோ சிலுவையின் மரண தருவாயில் கூட தன்னை தாழ்த்தி நமக்கு கற்று கொடுத்து இருக்கிறார்...

நீ....டி....ய... பொறுமை அவசியம்.

சோதனைகளும், நெருக்கங்களும் நம்மை மேற்கொள்ள அனுமதிக்காதீர்கள்.

எடி ஜோயல்
Blog : https://joelsilsbee.blogspot.com
Whatsapp +91 8144 77 6229
Greeting you in the name of our unchanging Lord. He is the same yesterday, today and Tomorrow.

Jesus Christ –
in His power;
By saying a word - dead came alive,
by a command - Wind and Sea kept quietness,
On a touch - sick healed,
food and vine multiplied by one word and still we can count such things more and more.

Do we stand humble if atleast one among the above is possible by us? We would govern everyone boasting the talent, aren’t we?

But Jesus neither in a place nor at any situation He boasted Himself. In fact He commanded others not to boast about Him (Phil 2:6-8, Luke 4:41)

We should learn to live humble. Not only when other praises us, but also if we are cornered or humiliated. We thrive to prove our efficient at many times.

Jesus Christ never tried to prove Himself. Even at the time of His death at cross! That’s the lesson we require to learn.

F..o..r..b..e..a..r..a..n..c..e….. is very important in the Christian life.

Never allow the tempations or tests overcome us.

Eddy Joel
Blog : https://joelsilsbee.blogspot.com
Whatsapp +968 93215440
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக