திங்கள், 23 ஜூலை, 2018

Daily Dose 14-6-18


ஆதியும் அந்தமுமான நம்முடைய தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

எப்படியாவது தன் கணக்கில் ஒருவரை கிறிஸ்தவனாக மாற்றி விடவேண்டும் என்று முயற்சி செய்து; ஆசீர்வாதம் உண்டு, கடன் தீரும், காலேஜ்ல வேலை கிடைக்கும், அப்படி இப்படி என்று ஆசை வார்த்தைகளை கூறி மெருகேற்றி ஞானஸ்நானதிற்கு சம்மதிக்க வைக்கிறது அநேகருக்கு கை வந்த கலையாகிவிட்டது.

பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் சொல்வதே இல்லை. எல்லாம் அப்புறம் ஆண்டவர் பார்த்துகொள்வார் என்று அவசரப்படுத்தி முங்கி எடுத்துவிடவேண்டியது.  ஐயோ பாவம், அந்த ஆத்துமா முன்னிலமைய காட்டிலும் பின்னிலைமையை இன்னும் மோசமாக்கி விட்டு விடக்கூடாது (மத் 23:15)

இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்துகொள்ளும்போது பாவம் மன்னிக்கப்படுகிறது(மாற்கு 16:16), நித்திய ஜீவனுக்கு நாம் தகுதியாகிறோம். தேவனுடைய பாதையில் தொடர்ந்து முடிவு பரியந்தம் நிற்கும் போது முழுமையாய் இரட்சிக்கப்பட்டு பரலோகத்தை சுதந்தரித்துகொள்கிறோம். (மாற்கு 13:13).

ஏறத்தாழ 120 வருடம் பிரசங்கித்து நோவா தன் சொந்த குடும்பத்தை மாத்திரம் ஆதாயப்படுத்திக்கொண்டார் !!

விதைக்க வேண்டியதும் நீர் பாய்ச்ச வேண்டியதும் நம் வேலை. வளரச்செய்வது தேவனுடையது.
வசனத்தை கலப்படம் இல்லாமல் விதைப்போம். பலனை எதிர்பாராமல் விதைப்போம். பலன் நிச்சயமாய் வரும்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

May the God of Beginning and End bless you.

It has become practice to many; saying sweet words like blessings in Family, job, education etc to Non-Christians to convince them accepting Jesus Christ and baptize.

They never mention about their sin in life and Justice etc. They think, once they are baptized, God will take care of it. Let us not make their soul worse than before by doing so (Matthew 23:15)

Sin is forgiven when we believe that Jesus is the Christ and baptized (Mark 16:16). Those deserve eternal life when continue to follow the path of God. We enter Heaven when we hold the faith steadfastly till our last breath (Mark 13:13).

For nearly 120 years Noah preached the world and managed to earn his own family!

It is our job to sow and water. Growing is God's. Let us sow the verse without contamination. Sow it without any expectation. The fruit will definitely come.

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக