செவ்வாய், 17 ஏப்ரல், 2018

Daily Dose 17-4-18

சபைக்கு தலையாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

புதிய பிரமாண காலத்தில் இருக்கிறோம்.
மணி அடித்து அழைக்கும் கட்டிடமோ,
கொட்டு அடித்து கூப்பிடும் கூடாரமோ,
அலங்கரித்து உயர்ந்த வடிவமைப்பில் கரையோரத்தில் நின்று கொண்டு இருக்கும் இடமோ “சபை” என்று வேதம் சொல்லவில்லை.

அவை எல்லாம் சபை கட்டிடங்கள் தான். கடவுள் அதனுள் வசிக்கவில்லை!! 

பீடங்களில் இருந்து ஜெபித்தால் தேவனுடைய காதுகளில் விழுந்து விடுவது போல நம்பிக்கொண்டு இருப்பது 2000 வருடங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டு போனது. இன்னமும் அதையே நம்பிக்கொண்டு நாட்களை வீணடிக்க வேண்டாம். எங்கும் தொழுது கொள்ளும் காலத்தில் நாம் வாழுகிறோம்.

இரட்சிக்கப்பட்ட நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். அவர் வியாபித்து இருப்பது நம் சரீரத்தில்.  நாம் கூடும் இடத்திலும் அவர் பிரசன்னாமாகிறவர்.

இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்தார்.
இங்கு சபை என்பது “கிறிஸ்துவின் சரீரத்தை” குறிக்கிறது.
இரட்சிக்கப்படுகிறவர்கள் கர்த்தர் சரீரத்தில் அங்கங்களாக சேர்க்கப்பட்டு வருகிறோம்.

ஒரே சபை ! ஒரே ஞானஸ்நானம் !   -   எல்லாம் ஓகே ஓகே என்று தலையை ஆட்டினாலும் தண்ணீர்  ஞானஸ்நானம் பலருக்கு போதவில்லை..

காலை ஒரு சபை, மாலை ஒரு சபை.. குடும்ப சபை, ஆதி சபை, ஆவிக்குரிய சபை, ஆவியில்லாத சபை என்று பட்டியல் நீளுகிறது?

கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாய் இருக்கிறீர்களா என்பதை ஊர்ஜீத படுத்திக்கொள்ளவும். (ரோம 16:16)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ, who is the Head of Church.

We are in New Convenant.
Neither the building calls with bells,
Nor the building invites you with their drums,
Nor the decorated building lies at the seashore is called “Church”

Those are all buildings where church gathers!! God does NOT dwell inside that building !!

Its been over 2000 years passed to those who believe their prayers are delivered directly into God’s ears if they plead from pulpit itself. Do not waste your time believing that anymore. We live in the ages to worship God anywhere.

We are the Church. God dwells in us.. He is also present when we gather.

Lord adds the repented soul into His church.
Here, Church represents His own Body. We are all parts and added to His body.

One Church ! One Baptism !  -  though people nod their head to this, still not saturated with water baptism..

Require a church in morning, another in evening, one as family church, other as revival church, other for salvation, another for spiritual growth and one for get together? List goes on like this??

Ensure you are in the body of Christ (Rom 16:16)

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக