#1256 – ராஜ்யம் என்னும் கிறிஸ்துவின் சபை ஒருமையில் இருக்க, பரலோக ராஜ்ஜியத்தின் “திறவுகோல்களை” உனக்குத் தருவேன் என்று பன்மையில் சொல்லப்பட்டதன் காரணம் என்ன?
*பதில்*: திறவுகோலை ஒருவர் வைத்திருக்கிறார் எனில் – அது அவரது கையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைக் குறிக்கிறது.
மத்தேயு 16:19இல் இயேசு கிறிஸ்து திறவுகோல் என்று சொல்லாமல் "திறவுகோல்கள்" (கிரேக்கம் - kleidas) எனப் பன்மையில் குறிப்பிட்டிருப்பதன் நோக்கம், அதில் பன்முகத்தன்மை உள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.
ஒரே ஒரு திறவுகோல் என்பது ஒரு குறிப்பிட்ட கதவை அல்லது பூட்டை மட்டுமே திறப்பதற்கான அதிகாரத்தைக் குறிக்கும்.
ஆனால், பன்மையின் அவசியமோ ராஜ்யத்தின் சுவிசேத்தை முதன்முதல் பயன்படுத்தியதற்கு மாத்திரம் அல்ல, சபையின் நிர்வாகம் மற்றும் ஆன்மீகப் பொறுப்புகளின் பரந்த அதிகாரத்தையும் குறிக்கிறது.
பெந்தெகோஸ்தே என்னும் யூதர்களின் பண்டிகையான 50ம் நாளன்று, பேதுரு முதன்முறையாக, இஸ்ரவேல் மக்களுக்கு சத்தியத்தை போதித்து அவர்கள் கிறிஸ்துவிற்குள் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைவதற்கான கதவைத் திறப்பது.
இப்படியாக, பேதுரு இந்த நற்செய்தித் திறவுகோல்களைப் பயன்படுத்தி மூன்று விதமான மக்களுக்கு தேவனுடைய ராஜ்யத்தின் கதவைத் திறந்ததைக் காண்கிறோமே.
1. யூதர்கள்: பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் நற்செய்தி அறிவித்தது (அப்போஸ்தலர் 2).
2. சமாரியர்கள்: சமாரிய விசுவாசிகளுக்கு நற்செய்தி வாயிலைத் திறந்தது (அப்போஸ்தலர் 8).
3. புறஜாதியார் (யூதர் அல்லாதோர்): கொர்நேலியு வீட்டில் புறஜாதியினருக்கு நற்செய்தி கதவைத் திறந்தது (அப்போஸ்தலர் 10).
பின்னர், சபையின் நிர்வாகம் & ஒழுங்கு நடவடிக்கையில் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தியது. எதைச் செய்ய அனுமதிப்பது ("அவிழ்ப்பது"), எதைத் தடை செய்வது ("கட்டுவது") என்பதற்கான சபை சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம். அதி. 15:1-20, மற்றும் சபையின் நிர்வாகச் சட்டங்கள் போன்றவை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும்* :
*வலைதளம் :*
*YouTube “வேதம் அறிவோம்”* :
-------------------------*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக