ஞாயிறு, 25 அக்டோபர், 2026

#1255 - ஒரு மனிதன் பிசாசுக்கு இடம் கொடுப்பதால் அவனுக்குள் பிசாசு புகுந்து விடுகிறது. ஒரு மிருகத்துக்குள்ளோ அல்லது பறவைக்குள்ளோ செல்ல முடியுமா?

#1255 - *ஒரு மனிதன் பிசாசுக்கு இடம் கொடுப்பதால் அவனுக்குள் பிசாசு புகுந்து விடுகிறது. ஒரு மிருகத்துக்குள்ளோ அல்லது பறவைக்குள்ளோ செல்ல முடியுமா?*

*பதில்* : மிருகத்திற்குள் பிசாசு புகுந்ததற்கான ஆதாரத்தை நாம் மத்தேயு 8:31-32ல் காணலாம். 

பிசாசுகள் மனிதர்களுக்குள் மட்டுமல்ல, பன்றிகள் போன்ற மிருகங்களுக்குள்ளும் கிறிஸ்து இப்பூமியில் வாழ்ந்திருந்த காலத்தில் புகுந்ததாக வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 18:2-ல் பாபிலோன் பற்றிக் கூறும்போது, “அது பிசாசுகளின் குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளின் காவல்வீடும், சகலவித அசுத்தமும் அருவருப்புமுள்ள பறவைகளின் கூடுமாயிற்று” என்ற வரிகளை கண்டாலும், அது ஒரு ஒப்பனை. 

கூடுதல் தகவலாக இதையும் எழுத வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
மனிதனுக்குள் பிசாசு புகுவதற்கும், பிசாசுக்கு இடம்கொடுப்பதற்கும் என்ன தொடர்பு?

எபேசியர் 4:27: பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் என்று பவுல் எழுதுகிறார். 
பிசாசுக்கு இடம்கொடுப்பது என்றால் அவன் நிச்சயமாக ஒருவருக்குள் புகுந்துவிடுவான் என்ற அர்த்தம் அல்ல. எண்ணங்களில் தூய்மையாய் இருப்பதைக் குறித்து சொல்கிறது. 

அதாவது, 
இரட்சிக்கப்பட்டவர்கள், தங்கள் பரிசுத்தத்தில் மென்மேலும் வளர்வதை விட்டு, நமது இருதயத்தை கலங்கம் பண்ணி சூழலுக்கேற்ற பொய் பேசுவது, மற்றவர்களைக்குறித்த சிந்தனைகளின் மூலம் சொந்த இருதயத்தில் கசப்பு வளர்த்திக்கொள்தல், கோபத்தினால் தகாத வார்த்தைகளையும் தீய வார்த்தைகளையும் பிரயோகித்தல், வேலைசெய்ய திராணியும் சமயமும் இருந்தும், சுயமாய் வேலை செய்து அதிலிருந்து குறைச்சலுள்ள மற்றவர்களுக்கு கொடுப்பதை விட்டு, வேறொருவரிடம் வாங்கி நிறைவேற்றுவது போன்றவற்றை பவுல் இங்கே குறிப்பிடுகிறார். எபே. 4:22-31

யோவான் 13:27 மற்றும் லூக்கா 22:3-ம் வசனங்களில், யூதாஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகுந்ததாகக் கூறப்படுகிறது.

எனவே, பிசாசுக்கு இடம்கொடுப்பது மற்றும் ஒருவருக்குள் பிசாசு புகுவது ஆகியவற்றை வேதாகமம் ஒரே பொருளில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தவில்லை.

இந்த தலைப்பிற்கு கூடுதல் தகவலாக வேறொருவர் கேட்ட கீழ்கண்ட கேள்வியையும் நீங்கள் வாசிக்கலாம்.

#463 - இறந்த மனிதர்களின் ஆத்மா பரதீசு/பாதளம் சென்றுவிடும், இந்த பூமியில் இருக்காது. பிறகு எப்படி பிசாசு பிடித்த அனேகரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும் விரட்டினார்களே இவைகள் எவ்வகையான பிசாசுகள்?  எத்தனை வகையான பிசாசுகள் மற்றும் ஆவிகள் உள்ளன?  பிசாசுகள் மற்றும் ஆவிகள் என்றால் என்ன?  - என்ற கேள்விக்கான பதிலை நமது வலைதளத்திலிருந்து வாசிக்கவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக