ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

#1234 - இக்காலத்திலுள்ள பிலிப்பைன்ஸ் நாடு தான் வேதாகம காலத்தில் பவுல் எழுதிய பிலிப்பியருக்கான நிருபமா?

#1234 – *இக்காலத்திலுள்ள பிலிப்பைன்ஸ் நாடு தான் வேதாகம காலத்தில் பவுல் எழுதிய பிலிப்பியருக்கான நிருபமா?*
 
*பதில்* : இல்லை, Philippines நாடும், பைபிளில் குறிப்பிடப்படும் Philippians மக்களும் ஒரே இடம் அல்ல.
 
“பிலிப்பியர்” என்பது பிலிப்பி நகரத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் குறித்து சொல்லப்படுகிறது. இந்த நகரம் இன்றைய Greece (கிரீஸ்) நாட்டில் இருந்தது.
 
அப்போஸ்தலர் 16:12 -  “அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.” - இது பிலிப்பி நகரத்தை குறிப்பிடுகிறது.
 
பிலிப்பியர் 1:1 - “இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:”
 
பிலிப்பைன்ஸ் நாடு என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சமார் 7,000 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடு. அந்த நாடு 1,543 -ஆம் ஆண்டு, ஸ்பெயின் மன்னர் Philip II of Spain அவர்களின் பெயரை வைத்து அந்த நாட்டுக்கு பெயர் சூட்டப்பட்டது. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :

Q&A Book ஆர்டர் செய்ய :

வலைதளம் :

YouTube “வேதம் அறிவோம்” :


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக