செவ்வாய், 30 செப்டம்பர், 2025

#1220 - நாகமான் தான் சுகமடையவேண்டுமென்று எலிசா தீர்க்கதரிசியினிடத்திற்கு காணிக்கை எடுத்து கொண்டு போனதன் இன்றைய மதிப்பிற்கு இந்திய ரூபாய் எவ்வளவு இருக்கும்?

#1220 - நாகமான் தான் சுகமடையவேண்டுமென்று எலிசா தீர்க்கதரிசியினிடத்திற்கு காணிக்கை எடுத்து கொண்டு போனதன் இன்றைய மதிப்பிற்கு இந்திய ரூபாய் எவ்வளவு இருக்கும்? பத்து தாலந்து வெள்ளி,ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்,பத்து மாற்று வஸ்திரம் - 2 இராஜாக்கள் 5:5*
 
ஏனென்றால் தேவமனுஷனாகிய எலிசா அவனுடைய காணிக்கையை ஏற்கவே மறுத்து விட்டாரே.. உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரிசி எலிசா என்றால் அது மிகையாகாது.
 
*பதில்* : 
30ந் தேதி செப்டம்பர் 2025, இந்தியாவில் உள்ள மதிப்பின்படி, கீழே உள்ள தகவல்களை எழுதுகிறேன்.
 
*1. வெள்ளி (Silver) – 10 தாலந்து*

1 தாலந்து = 34 கிலோ (சுமார்).
ஆக 10 தாலந்து = 340 கிலோ வெள்ளி.
வெள்ளி விலை: சுமார் ₹1,51,000 / கிலோ.
ஆக, 340 கிலோ x 1,51,000 = ₹51,340,000 = ₹5.13 கோடி.
 
*2. பொன் (Gold) – 6,000 சேக்கல்*
1 சேக்கல் = 11.4 கிராம்.
ஆக 6,000 சேக்கல் = 68,400 கிராம் = 68.4 கிலோ பொன்.
தங்கம் விலை: சுமார் ₹10,765 / கிராம் (22k standard).
ஆக  68,400 கிராம் x 6,000 = ₹736,326,000 = ₹73.63 கோடி.
 
*3. மாற்று வஸ்திரங்கள் – 10*
இவை விலை உயர்ந்த ராஜ குல உடைகள். ஆனால் நவீன மதிப்பில் கணக்கிட கடினம். குறைந்தபட்சம் ₹5 லட்சம் – ₹10 லட்சம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
மொத்த மதிப்பு (வெள்ளி + பொன் + வஸ்திரங்கள்)
 
*ஆக மொத்தம் சுமார் = ₹78 முதல் 80 கோடி இந்திய ரூபாய்*. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229

Q&A Biblical Whatsappல் இணைய (locked group) :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
--------------------*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக