#1221 - *நியாயப்பிரமாணத்தை மீறுகிறது பாவம் என்ற 1 யோவான் 3:4ம் வசனத்தில் எவற்றை பாவம் என்று குறிப்பிடுகிறார்கள்? எந்த நியாயப்பிரமாணத்தை இந்த புதிய ஏற்பாட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்?*
நான் சொல்வதோ யாத். 20:3-17ல் சொல்லியிருக்கிற பத்து கற்பனைகள் தான் அந்த நியாயப்பிரமாணம்.
இந்த நியாயப்பிரமாணம் இல்லை என்று நீங்கள் சொல்வீர்களானால் முதல் கட்டளையான “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்” (யாத். 20:3) தேவனைத் தவிர வேறு எந்த தேவனையும் நாம் வணங்கக்கூடாது என்பதும் இந்த கற்பனையில் தான் உள்ளது.
ஓய்வு நாள் சனிக்கிழமை இல்லை என்று நீங்கள் சொல்வீர்களானால் முதல் கற்பனையும் இல்லை என்று சொல்வதாய் எடுத்துக்கொள்ளலாமா?
*பதில்* : நியாயப்பிரமாணம் என்றவுடனேயே, “இஸ்ரவேலருக்கு மோசேயின் மூலமாய் கொடுத்ததையே பலரது மூளை தொடர்பு படுத்திவிடுகிறது”
நியாயப்பிரமாணம் என்றால் சட்டம் !!
ஒரு இந்திய குடிமகன், அமெரிக்கா சென்றாலும் இந்தியாவின் சட்டத்தையே கடைபிடிப்பேன் என்று அமெரிக்காவின் சாலையில் இடது பக்கம் வாகனத்தை செலுத்தமுடியாது. அங்குள்ள சட்டம் அவரை தண்டிக்கும்!
சட்டத்தை மீறுவது குற்றம்!
அப்படியாக, 1யோவான் 3:5-8 வசனங்களையும் வாசிக்க வேண்டும். தேவனுடைய சட்டத்தை மீறி தேவனை விட்டு தூரம் சென்ற எவரையும் காப்பாற்ற கிறிஸ்து இயேசுவானவர் வந்தார்.
மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்ட சட்டம் அனைவருக்குமானதல்ல!
எகிப்திலிருந்து வெளியே வந்த ஜனங்களுக்கு ஒரு புதிய தேசத்தைக் கொடுத்து அந்த தேசத்திற்கான சட்ட விதிகளை தேவனே அவர்களுக்கு 10+603 கட்டளைகளை வகையறுத்துக்கொடுத்தார்.
தார்மீகச் சட்டம், தொழுகைக்குரியச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்கள் அதில் அடங்கும்.
திருடாதே, பொய் சொல்லாதே, விபச்சாரம் செய்யாதே போன்றவை – தார்மீகத்திற்குறியது!
வருடத்திற்கு ஒரு முறை எருசலேம் செல்வது, காளை பலி செலுத்துவது, தசமபாகம் கொடுக்கவேண்டும் போன்றவை – தொழுகைக்குரியது!
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஓய்வு நாளில் வேலை செய்பவனை கல்லெறிந்துக் கொல்லவேண்டும் போன்றவை – குற்றவியல் சட்டத்திற்குறியது!
தார்மீகச் சட்டம் – எந்தக் காலத்திலும் அனைவருக்கும் அனைத்து தேசத்தாருக்கும் பொருந்தும்.
மோசேயின் மூலமாய் இஸ்ரவேலருக்கு கொடுத்த நியாயப்பிரமாணம் இன்றும் நான் கடைபிடிக்கிறேன் என்று சொல்லும் எவரும் “கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஓய்வு நாளில் வேலை செய்பவனை கல்லெறிந்துக் கொல்லவேண்டும் போன்ற மோசேயின் நியாயப்பிரமாணத்தை” கடைபிடித்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரிவிக்கவும்! அருகாமையிலுள்ள காவல் நிலையம் அதை பொறுப்பெடுக்கும்!
சத்தியத்திற்கு கீழ்படிய மனமில்லாதவர்கள் கிறிஸ்துவின் வருகை வரை இருப்பார்கள்.. மத். 13:27-29
(மோசேயின்) நியாயப்பிரமாணத்தை கிறிஸ்துவின் காலத்திற்கு பின்பும் கடைபிடிக்க நினைப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று வேதம் சொல்கிறதே!! கலா. 3:10, யாக். 2:10
அப்படிப்பட்டவர்கள் தங்களை மாத்திரமல்ல, தங்களது போதனையை கேட்கும் அனைவரையும் சாபத்திற்கும் நரகத்திற்குள்ளும் தள்ள முயற்சிக்கிறார்கள்.
தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள். 1தீமோ. 1:7
இயேசுகிறிஸ்துவை கொலை செய்ததும், ஸ்தேவானைக் கொலை செய்ததும், அப்போஸ்தலர்களைக் கொலை செய்ததும் இதே காரணங்களுக்காகத் தானே… மாற்கு 14:57, யோ. 2:18-21, அப். 6:14; 14:2
மோசேயின் நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் ஜனங்களுக்கே 2,000 ஆண்டுகளுக்கு முன்னதாக காலாவதியான போது, சம்பந்தமே இல்லாதவர்களும் மாம்சத்தின்படி லேவியருமல்லாதவர்களுமான இந்த ஜனங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு முட்டுக்கொடுப்பது அறிவீனத்தின் உச்சம். ரோ. 10:4, கொலோ. 2:14-15.
பகையாய் நின்ற சுவரை தனது மரணத்தினால் எடுத்துப்போட்ட இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையே தவறு என்று சொல்ல முற்படுவது எவ்வளவு பெரிய ஆக்கினைக்குள்ளாவார்கள் என்பதை அறியாமல் பேசுகிறார்கள்.
விரைவில் தங்கள் தவறை உணர்ந்து புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன். எபே. 2:15-16
10 கட்டளைகள் உலக மக்களை கட்டுப்படுத்தாது. 10 கட்டளையை முழுவதுமாக உள்ளடக்கி கிறிஸ்து தன் ஜனங்களுக்கு புதிய ஏற்பாட்டில் கொடுத்திருக்கிறார். மத். 22:36-40.
இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
*நாம் கிறிஸ்துவிற்கு செவிசாய்க்க வேண்டும்*
“அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், *இவருக்குச் செவிகொடுங்கள்* என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று”. மாற்கு 9:7
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; *என்னாலேயல்லாமல்* ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்*. என்று இயேசு கிறிஸ்து சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். யோ. 14:6
மோசேயின் மூலமாய் கொடுத்த கட்டளையின்படியல்ல கிறிஸ்துவின் கட்டளையை நாம் பின்பற்ற வேண்டும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +918144776229 (India)
*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக