#1216 - *வானத்தில் ஏறிப்போன எலியா மீண்டும் வருவார் என்று யூதர்கள் ஏன் நம்பிக்கை கொண்டு இருந்தார்கள்? எலியா வந்து எல்லாவற்றையும் ஆயத்த படுத்துவது மெய்தான் என்று இயேசு சொல்கிறார்.. யோவான்.. நான் எலியா அல்ல என்கிறார்.. விளக்கம் தந்தால் நல்லது..?*
*பதில்* : கிறிஸ்துவின் பிறப்பதற்கு / காலத்திற்கு முன்பு தேவனிடத்திலிருந்து பூமிக்கு அளிக்கப்பட்ட கடைசி வார்த்தையில் எலியாவை பூமிக்கு அனுப்புவதாக மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாக (மல். 4:5) சொல்லப்பட்டது.
மல். 4:4 ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.
மல். 4:5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
மல். 4:6 நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
ஏறத்தாழ 400 வருடங்கள் எந்த தொடர்பும், செய்தியும், வானத்திலிருந்து தீர்க்கதரிசிகள் மூலமாகவோ, நேரடியாகவோ சொல்லப்படவேயில்லை. அதனை தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் (இரட்சகரின்) வருகையின் காலத்தை யோவான் முன்னறிவிக்க ஏற்படுத்தப்படுகிறார். மத். 3:1-3; மாற்கு 1:2-5; லூக். 3:2-6; யோ. 1:23, ஏசா. 40:3
அரசர்களையும், இராஜ்யங்களையும் வீர தீரமாய் எதிர்த்து இஸ்ரவேலுக்கு நியாயம் விசாரித்த எலியா தீர்க்கதரிசி, மரணத்தைக் காணாமல் வானத்திற்கு சுழல் காற்றில் வழியே தேவன் எடுத்துக்கொண்டதால் மீண்டும் உலகிற்கு எலியா வருவார் என்று இஸ்ரவேலர்கள் எண்ணினர். 2இரா. 2:11
2இரா. 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
ஆனால், இயேசு என்ற இரட்சகர் வருகிறார் என்று அறிவித்துக்கொண்டிருந்த யோவான்ஸ்நானன் தான் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட எலியா என்பதை இஸ்ரவேலர் அறியாதிருந்தார்கள். அப்போது அவர்களுக்கான விளக்கத்தை இயேசு கிறிஸ்து இவ்வாறாக தெளிவித்தார்.
மத். 11:14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
மத். 11:15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
மத். 17:10-13 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
Q&A Book ஆர்டர் செய்ய :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
-------------------------*
x

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக