#1208 - *அக்கிரமம், மீறுதல், பாவம் & குற்றம் – என்றால் என்ன?* இவற்றிற்கான அர்த்தத்தை சொல்லவும். அத்தனை வார்த்தைகளும் யாத். 34:7ல் வருகிறது.
*பதில்* :
*1- அக்கிரமம்* – ஆவோன் என்ற எபிரேய வார்த்தைக்கு வக்கிரம், அதாவது (தார்மீக) தீமை: தவறு, குறும்பு, தண்டனை (அக்கிரமம்), பாவம் என்ற அர்த்தம் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
கிரமம் என்றால் நேர்த்தி. அக்கிரமம் என்பது நேர்த்தியின்மை. அதாவது நேர்த்தியானதை செய்யாத செயல். கிரமம் எது என்று லேவி. 18:1-24ல் காணலாம். அதை மீறும் பொழுது அக்கிரமம் என்று பட்டியலிடப்படுகிறது. லேவி. 18:25 ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.
கீழ்படியாமையின் விளைவு.
சங்கீதம் 51:5ல் தாவீது தன்னைக்குறித்து தேவனுக்கு முன்பதாக தாழ்த்தும் போது ”துர்க்குணத்தில் உருவானேன்” என்ற வார்த்தையில் ஆவோன் என்ற எபிரேய வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் துா்க்குணம் என்றுள்ளதை கவனிக்கவும்.
*2- மீறுதல்* - பெஹ்'-ஷா என்ற எபிரேய வார்த்தைக்கு ஒரு கிளர்ச்சி (தேசிய, தார்மீக அல்லது மத): பாவம், மீறுதல், அத்துமீறல் என்று அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவனுடைய சட்டங்கள், கட்டளைகள் அல்லது உடன்படிக்கையை வேண்டுமென்றே கீழ்ப்படியாமையில் இருப்பது மீறுதல்.அல்லது துரோகம் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
யாத். 23:21 அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை (பெஹ்-ஷா) அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.
யோசுவா 24:19 யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார்.
*3- பாவம்* – ”க்கட்டாவ்வ்” என்ற எபிரேய வார்த்தைக்கு இந்த வசனத்தில் ”பாவம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அந்த எபிரேய வார்த்தைக்கு குற்றம் (சில நேரங்களில் பழக்கமான பாவம்), மற்றும் அதன் தண்டனை, போன்ற அர்த்தங்கொண்டுள்ளது. பாவம் என்பது “நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தையோ, அமைப்புமுறையையோ மீறுவது அல்ல, ஆனால் ஒரு தனிப்பட்ட சட்டமியற்றுபவர் மற்றும் தார்மீக உரிமையாளருக்கு எதிரான குற்றமாகும்.
*பாவம் என்றால் என்ன*?:
பாவம் என்பதன் மிக எளிமையான விளக்கம் என்னவென்றால், "பாவம் செய்யும் ஒவ்வொரு மனிதனும் தேவனின் சட்டத்தை மீறுகிறான். பாவம் என்பது தேவனுடைய சட்டத்தை மீறுவதாகும்" (I யோவான் 3:4, ரோ. 4:15).
எல்லா பாவங்களும் உள்ளிருந்து தொடங்குகின்றன, "இருதயத்திலிருந்து தீய எண்ணங்கள், கொலைகள், விபச்சாரம், விபச்சாரங்கள், திருட்டுகள், பொய் சாட்சிகள், தெய்வ நிந்தனைகள் ஆகியவை வெளிவருகின்றன. இவையே மனிதனைத் தீட்டுப்படுத்தும்" (மத்தேயு 16:19-20).
*4- குற்றம் / குற்றவாளி* - பாவம் என்பதை செயல்படுத்தி அது நிரூபனம் செய்யப்பட்டதாகும். அக்கிரமம் என்ற வார்த்தையையே பல இடங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக