*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
தேவைகளை சந்தித்து, நம்மை திருப்தியாய் ஆசீர்வதிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தன் கொள்கைக்கு ஆதரவாக ஒரு வார்த்தையை வேதாகமத்தில் தேடி அதைப்பற்றிக்கொண்டு காலம் முழுக்க மற்றவர்களையும் குருடாக்கும் திறனிலிருந்து விடுபடுவது அவசியம்.
சத்தியத்தின் கருத்தை உள்வாங்க மனமில்லாத ஒருவரை சந்தித்தேன்.. 1பேதுரு 3:3 மற்றும் 1 தீமோ. 2:9-10 ன்படி பரிசுத்த பெண்கள் நகை அணியவே கூடாதென்று வாதிட்டார். தங்கத்தை தொட்டாலே பாவம் என்பது போல பேசினார்.
நகை அணிவதும், அணியாமல் விடுவதும் அவரவர் விருப்பம்.
அதைக் கிறிஸ்தவ கொள்கையாக வற்புறுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை.
கிரேக்க மொழி வேதத்தில் இதே வசனத்தை காணும்போது, “*விலை உயர்ந்த* வஸ்திரம்” என்ற பதம் இல்லை.. “வஸ்திரம்” என்று தான் இருக்கிறது !! ஆதி ஆங்கில வேதாகமங்களிலும் இவ்வாறே உள்ளது.
அப்படியென்றால் வஸ்திரம் இல்லாமல், தலை முடியை வாராமல் இருக்க வேண்டும் என்றர்த்தம் இல்லை..
தன் பக்கம் மற்றவர்களை ஈர்க்காத அளவிலும்,
நன்னடத்தையை காட்டிலும் வேறெதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்பதே பொருள்.
எசே. 16:9-14 வசனங்கள் – ஆச்சரியமானவை... வாசித்து தியானியுங்கள்.
வேதமும், ஜெபமும், நன்னடத்தையும் நமக்கு பிரதானமாய் இருக்கட்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக