செவ்வாய், 21 ஜூன், 2022

#1144 - கிறிஸ்தவர்கள் சீட்டு விளையாடுவது தவறா? ஆன்லைனில் விளையாடலாமா?

#1144  -*கிறிஸ்தவர்கள் சீட்டு விளையாடுவது தவறா? ஆன்லைனில் விளையாடலாமா?*

*பதில்* : நம் சமூகத்தில், சூதாட்டக்காரர்கள் பணத்தை வைத்து சீட்டு விளையாடுகிறார்கள்.

சீட்டு கட்டு விளையாட்டை விளையாடுபவர்களை  சட்டென பார்க்கும் எவரும் அவர்கள் சூதாடுகிறார்கள் என்ற ஆரம்ப புரிதலை கொண்டு வருகிற நோக்க காலத்திலேயே இன்னமும் நாம் வாழ்கிறோம்.

சீட்டுக்கட்டு விளையாட்டில் பணம் வைத்து விளையாடும் போது சூதாட்டம் தொடங்குகிறது.

ஆனால், நீங்கள் வெறுமனே விளையாடுகிறீர்களா அல்லது பணத்துடன் விளையாடுகிறீர்களா என்பதை உலகம் அறியாது.

பந்தயத்தில்/பணத்திற்காக சீட்டு விளையாடுவது - அது தவறு..

கீழுள்ள வசனங்களை இந்த சூழ்நிலைக்கு பொறுத்திப் பார்ப்பது அவசியம்:

1கொரி. 8:8-10 போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை. ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள். எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?

1கொரி. 10:28-33 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. உன்னுடைய மனச்சாட்சியைக் குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன? 1Co 10:30 மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்? ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல; நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.

மேலும், சூதாட்டம் வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டது. பணம் வைத்து சீட்டு விளையாடுவதில் எப்போதும் மற்றவர்களது பணத்தை எப்படியாகிலும் அபகரித்து விடவேண்டும் என்ற நோக்கமே இருக்கிறது. அது தீமை.

ஆக்கப்பூர்வமாகவும் மற்றவர்களின் நலனுக்காகவும் வேலை செய்ய வேதம்  அறிவுறுத்துகிறது.

திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். எபே. 4:28.

வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான். நீதி. 13:11

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1தீமோ. 6:10

சூதாட்டம் தார்மீக ரீதியாக தவறானதே. அரசாங்கமும் அதை கண்டிக்கிறது.
ஏனென்றால் அது பேராசை, வேறொருவருக்கு சொந்தமானது என்பதற்கான சுயநல விருப்பம்.

இக்காலங்களில் ஆன்லைனிலும் இப்படிப்பட்ட சீட்டு விளையாட்டு அதிகம் வலம் வருகிறது. உங்களது பொழுது போக்கிற்கு எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் இதை தேர்ந்தெடுத்து விளையாடுவதென்பது வேதாகமத்தின்படி தவறு என்பதில் துளியும் சந்தேகமில்லை.
மற்றவரின் பணத்திற்கு ஆசைபடுவது இச்சை மற்றும் அது பாவம். யாத். 20:17, ரோ. 13:9

ஆன்லைன் சூதாட்டத்தில் எத்தனையோ மனிதர்கள் தங்கள் சொத்துக்களை இழந்து குடும்பத்தில் அவமானம் தாங்காமல் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்கள். அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. 1கொரி. 10:6

பணம் சம்பாதிக்க வேலை செய்ய வேண்டும்.
தொலைபேசியை தொடர்பு சாதனமாக மாத்திரம் பயன்படுத்துவது வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது. பிர. 5:12

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக