#1143 - *பவுல் திருமணமாகாதவர் என்று ஒரு சாரரும் இன்னுமொரு குழுவினர் அவர் திருமணமானவர் என்றும் சொல்கிறார்களே?* மேலும், திருமணம் இல்லாமல் சனகெரிப் சங்கத்தில் உறுப்பினராயிருக்க வாய்ப்பு இல்லை என்றும் சொல்கின்றனர். விளக்கவும்.
*பதில்* : பவுல் திருமணம் செய்தவர் என்று எவ்விடத்திலும் வேதம் நமக்குக் குறிப்பிடவில்லை.
மேலும், அவர் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபம் வரைக்கும் அவருக்கு திருமணமாகவில்லை என்பது திண்ணம் (1கொரி. 7:8).
இந்தக் கடிதத்தை எழுதும் போது அவர் ஒருவேளை கைம்மகனாக (Widower) இருந்திருக்கலாம் அல்லது அவர் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளாதவராவும் இருந்திருக்கலாம். இந்த இரண்டு கருத்துகளுமே சாத்தியம்.
அவருடைய எந்த எழுத்திலும் தன்னுடைய மனைவியைப் பற்றிக் குறிப்பிடாததால் 1கொரி. 9:5ன் கூற்றின்படி ஒருவேளை பவுல் திருமணம் செய்த பின்னர் மனைவி மரித்திருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.
மேலும், பவுல் ஒரு பரிசேயராக இருந்ததன் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டார் என்றும் சிலரது நம்பிக்கை.
ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டிருக்கலாம் அல்லது அவர் வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருந்திருக்கலாம். எதுவுமே யூகம் மட்டுமே. 1கொரிந்தியர் எழுதும் போது அவர் திருமணமாகாதவர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
சனகெரிப் சங்கத்தில் உறுப்பினராயிருப்பவர்கள் கட்டாயம் திருமணம் செய்திருக்கவேண்டும் என்ற குறிப்பு எங்கும் காணப்படவில்லை.
யூதர்களின் பாரம்பரியம் மற்றும் சரித்திர குறிப்புகளிலும் அத்தகைய கட்டளை இருப்பதாக நான் அறியவில்லை. (jewishencyclopedia.com/articles/13178-sanhedrin)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
சனி, 18 ஜூன், 2022
#1143 - பவுல் திருமணமாகாதவர் என்று ஒரு சாரரும் இன்னுமொரு குழுவினர் அவர் திருமணமானவர் என்றும் சொல்கிறார்களே?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக