*தீமைக்கு பதில் நன்மையே செய்வோம்*
by : Eddy Joel Silsbee
சகலத்தையும் நன்மையாய் நடத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஒரு சங்கடம் வந்ததும் உடனடியாய் அதற்கு மாறுத்தரம் செய்ய மனம் துடிக்கும்.
யாராவது நமக்கு தீங்கு செய்தால், வேறு சிந்தையேயில்லாமல் உடனடியாய் அதற்கு ஈடான தீங்கை மாறுதரமாக செய்ய நமது இருதயம் துடிக்கிறது.
கிறிஸ்தவர்களுக்கு அந்த எண்ணம் ஒருபோதும் இருத்தல் கூடாது.
தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார் என்று வேதம் நீதி. 20:22 சொல்கிறது.
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள் என்று ரோ. 12:17ல் வாசிக்கிறோம்.
பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள் என்கிறது ரோ. 12:19.
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள் என்று தெசலோனிக்கேயருக்கு பவுல் 1தெச. 5:15ல் எழுதுகிறார்.
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். 1பேதுரு 3:9
*தீமைக்கு தீமையை அல்ல…நன்மையை செய்வோம்*
அதற்கான பலனை தேவன் நமக்குத் தருவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக