*பித்தளையும் இரும்பும்*
by : Eddy Joel Silsbee
நம்மை பரிசுத்தப்படுத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பித்தளையும் இரும்பும் ஒரு காலத்திலும் சேராது.
புதிய யுக்தியைக் கொண்டு நவீன பசைகளினால் இரண்டையும் இணைத்து வைத்தாலும் தனது தன்மைகளில் ஒன்று சேராமல் அவை இரண்டும் தனிமையாகவே இருக்கும். திறமையினால் நாங்கள் ஒன்று சேர்த்துவிட்டோம் என்று எவர் சொன்னாலும் அது ஏமாத்து வேலையே.
அது போல,
சொந்த கற்பனைகளையும் கொள்கைகளையும் ஜாதி அடையாளத்தையும் மோசேயின் நியாயபிரமாணத்தையும் தசமபாக கொள்கைகளையும் வைத்துக்கொண்டே;
புதிய ஏற்பாட்டு சத்தியத்தில் வாழ்கிறோம் என்று கூறும் எவரும்;
ஊரையும் தன்னையும் ஏமாற்றிக்கொள்ளும் மாயக்காரர்கள்!!
இரண்டில் ஏதாவதொன்றில் தான் இருக்க முடியும்.
புதிய ஏற்பாட்டு சத்தியத்தில் மாத்திரம் முழுமையாக இல்லாமல் வேறு எந்த கட்டளையுடனும் இணைந்திருந்தால் எப்போதும் ஒருகாலத்திலும் கிறிஸ்துவின் சரீரத்தோடு ஐக்கியமாக இருக்கவே முடியாது.
கிறிஸ்தவராக வாழ்கிறேன் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், சகலமும் நன்மையாக தோன்றினாலும்,
நியாயதீர்ப்பில் வேத வசனத்தை ஒப்பிட்டு நம் வாழ்க்கையை *நீதிபதி வாசித்துக் காண்பிக்கும் போது நமது ஆத்துமா பதறி போகும்*. யோ. 12:48
சட்டத்தை மீறுதல் என்ற பாவம் இருந்தால், தானாகவே பிதாவின் பிரசன்னத்தை இழந்து விடுவோம் !! (ஏசா. 59:2)
ஆகவே, ஆணித்தரமான, கூர்மையான வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல், சதா ஆசீர்வாதம், நன்மை, ஆரோக்கியம், நிறைவு, சமாதானம், சுகம் என்ற கேமாவிலிருந்து விழித்துக்கொண்டு உண்மைக்குத் திரும்புவோம்.
கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்படிவோம்..
அப்பொழுது, வெறும் நம்பிக்கையில் அல்ல,
உண்மையாகவே தேவன் நம்மோடு துணையாகவே எப்போதும் இருந்து சகலவற்றையும் நன்மையாக்குவார். மத். 6:33
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக