*குமாரனை முத்தஞ்செய்யுங்கள்*
by : Eddy Joel Silsbee
தேவ குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
குமாரனை முத்தம் செய்யுங்கள் என்று சங்கீதம் 2:12ல் அறிவுறுத்தப்படுகிறது !!
*முத்தம் செய்யுங்கள் என்றால் ஒப்புரவாகுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள், அங்கீகரியுங்கள்* என்று பொருள்.
அவரே இராஜா என்பதை உங்கள் சொந்த உள்ளங்களில் அங்கீகரித்து அவர் சொல்படி நடவுங்கள் என்று பொருள்.
கர்த்தரோடு ஒப்புரவு ஆகுதல் என்பது அவர் கட்டளைக்கு இணங்குவது, அவரது கட்டளைக்கு கீழ்படிவது, அதன்படியே செய்வதாகும்.
*முத்தஞ்செய்யாமல் முரண்பட்டால் விளைவு என்ன என்பதும் அதே வசனம் விளக்குகிறது !!
சங். 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆளுகையில் உள்ளோம். மோசே அல்ல, கிறிஸ்துவே ஆட்சி செய்கிறார்.
ஆகவே நியாயபிரமாணம் அல்ல விசுவாசப் பிரமாணத்திற்கு நாம் கீழ்படியவேண்டும்.
*கிறிஸ்தவர்கள், ஓய்வு நாளில் அல்ல வாரத்தின் முதல் நாளில் கூடி தேவனை ஆராதிக்க வேண்டும்*.
கிறிஸ்துவின் உபதேசமே நம்மை நியாயந்தீர்க்கிறது !! யோ. 12:48
எந்த நாட்டில் வாழ்கிறோமோ, அந்த நாட்டுச் சட்டத்திற்கு கீழ்படியாமலிருந்தால் தண்டிக்கப்படுவது நிச்சயமல்லவா?
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக