வியாழன், 28 ஏப்ரல், 2022

சூழ்நிலைக்கேற்ற பச்சோந்திகளா?

*சூழ்நிலைக்கேற்ற பச்சோந்திகளா?*

by : Eddy Joel Silsbee

 

நன்மையான எந்த ஈவையும் நமக்கு பரத்திலிருந்து பிதாவின் மூலம் பெற்று தந்த தேவ குமாரனின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.

 

மெலித்தா தீவாரின் குணம் நமக்கு ஒரு பாடம்.

 

சிறை குற்றவாளிகள் என்றும்,

அவர்கள் சிறைக் கைதிகள் என்றும் அறிந்திருந்த போதும்

மிக அதிகமாய் அன்பு செலுத்தினார்கள்..

தேவையானவற்றை தாமாக முன்வந்து அவர்களுக்கு உதவினார்கள். அப். 28:2

 

ஆனால் பவுலின் கையில் பாம்பை கண்டதும்,

அவர்களது நற்குணம் சடுதியில் மாறிப் போனது. அப். 28:3-4

 

பவுலோ அவர்களின் குணத்தின் மாற்றத்தைப் பொருட்படுத்தவில்லை. அப். 28:5

 

மேலும், பாம்புக் கடித்து பவுல் மரித்துவிடுவார் என்ற அவர்களது எண்ணம் நிறைவேறாமல், பவுல் சுகமாயிருப்பதைக் கண்டதும் மீண்டும் அதே கூட்டம் அவரை கடவுள் என்று போற்றத் துவங்கியது !! அப். 28:5-6

 

ஆம், இந்த மெலித்தா தீவாரைப் போல நாம் நமது சுற்றத்தாரையும் சூழ்நிலையையும் பார்த்து சொந்த குணத்தை கெடுத்து கொள்ளக்கூடாது.

 

திடீரென்று ஊர் மக்கள் போற்றுவார்கள், தூற்றுவார்கள், உயர்த்துவார்கள், தாழ்த்துவார்கள்.

 

நாமோ சுயத்தவறுகளை சரிசெய்து சொந்த உள்ளத்தை சீர்படுத்தி, தேவனுக்கு நேராய் *உத்தமத்தை பிடித்து நிற்பதில் உறுதியாய் இருப்போம்*.

 

* *நிலையான விசுவாசம் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தரும்* *

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/j6bexET8H74

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக