*பரிசுத்த கிறிஸ்தவ வேடதாரி*
by : Eddy Joel Silsbee
நீதியின் தேவனாகிய பிதாவானவருக்கே சகல மாட்சிமையும் உண்டாவதாக.
கிறிஸ்தவரல்லாதவரிடத்தில் இருக்கும் பயம் கூட கிறிஸ்தவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
தனக்குறியதல்லாத *சரீரத்துடன் உறவுகொள்ளும்* போது அது விபச்சாரம், வேசித்தனம் என்ற பழைய சட்டத்தை நீக்கி, *தவறான பார்வை அல்லது கற்பனையே* வேசித்தனம், விபச்சாரம் என்று கிறிஸ்து தன்னுடைய புதிய நியமனத்தில் கொண்டு வந்தார். மத். 5:28
இன்னொருவரின் மனைவியை / கணவனை விருப்பத்தோடு பார்த்து என் மனைவி / கணவன் இவரைப் போல இல்லையே என்று ஒப்பிடுவதை வேதாகமம் வண்மையாய் கண்டிக்கிறது. யூதா 1:7
சொந்த மனைவியும் / கணவனும் “தேவனுடைய தெரிந்தெடுத்தல்” என்பதை மறக்க கூடாது. அவர் திட்டமில்லாமல் ஒரு மயிரும் விழாத போது, வாழ்க்கையை அவர் திட்டமிடாமல் விட்டாரோ? நிச்சயமாக இல்லை. செய்த தவறுகளினாலேயே குடும்ப பிரிவுகள் ஏற்படுகிறது. அப். 27:34
சொந்த மனைவி / கணவனிடம் விரிசலை வைத்து கொண்டு;
அவருடன் சந்தோஷமாய் வாழாமல்
விழுந்து ஜெபித்தாலும்,
உபவாசித்து ஜெபித்தாலும்,
ஊக்கமாய் ஜெபித்தாலும்,
ஒப்புக்கொடுத்து ஜெபித்தாலும்,
ஒருவிசை கூட்டி ஜெபித்தாலும்,
அழுது ஜெபித்தாலும் …. எப்படி ஜெபித்தாலும், ஊருக்கு உபதேசித்தாலும் அது அனைத்தும் முற்றிலும் ஊருக்காக போடும் *வேஷம் / மாய்மாலம்*.
சொந்த துணைவருடன் உண்மையாய் சந்தோஷமாய் வாழ சகிக்க முடியாமல்; இச்சையும் சண்டையும் முற்றி இரண்டாவது மூன்றாவது நான்காவது ஜோடிகளை சேர்த்துக்கொண்டு சுகபோகமாய் வாழும் எவரும் தேவனுடைய பார்வையில் விபச்சாரமும் வேசித்தனமும் செய்தவர்களே.
சொந்த வாழ்க்கையை சரிசெய்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு போதகமும் உபதேசமும் செய்யவும் துணிகரம் கொண்டுள்ளனர்.
சொந்த மனைவி அல்லது கணவன் மீது சந்தேகமும், எரிச்சலும், விரோதமும், அதிருப்தியும் வைத்திருப்பதை ஒருவருக்கொருவர் விட்டு, *தேவன் கொடுத்த துணையுடன் அன்போடு வாழ வேதம் போதிக்கிறது*.
கிறிஸ்து தன் மணவாட்டிக்காக சிலுவையையே ஏற்றுக்கொண்டாரே. நமக்கு என்ன தடை? கிறிஸ்துவை பின்பற்றுவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு சொந்த துணைவருக்கே துரோகம் செய்பவர்கள் சொந்த வாழ்க்கையை “ஜீவன் இருக்கும் போதே சரிசெய்துக்கொள்வது அவசியம். நித்திய அக்கினிக்கு தப்பிக்க இன்றும் வாய்ப்புள்ளது”.
வேத வசனத்தை அநுதினம் படித்தாலும், எப்போதும் ஜெபித்தாலும் சொந்த கணவனிடம் / மனைவியிடம் அன்பில்லாமலும், துணைவருக்கு சரீர ரீதியாகவும் மனரீதியாகவும் செய்ய வேண்டிய *கடமைகளுக்கு உட்படாமலும் இருந்தால்*, போடும் காணிக்கைக்கு கூட அங்கீகாரம் இல்லை என்பதை மறந்து போக வேண்டாம். மத். 23:19, 5:24, 23:23
மனைவிக்கு தலை – *சொந்த* கணவன். கணவனுக்கு தலை – ஆண்டவராகிய கிறிஸ்து. 1கொரி. 11:3
தலைகள் அமைதியாய் உட்கார்ந்திருக்க, முண்டங்கள் மேடையேறி தலைகளுக்கு *பிரசங்கம் செய்ய துவங்கினபோதே* அவர்களது பரலோக பாதையும் மாறிவிட்டது. இவைகளை உணர்ந்து மனந்திரும்பி சீர்படுத்தப்பட வேண்டும்.
இந்த நாளின் வேத துளியை படிக்க ஜீவனை தேவன் கொடுத்திருந்தாரென்றால் – மனம் மாறும்படியான அழைப்பு அது !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/aoYlxdv-LEQ
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக