ஞாயிறு, 6 மார்ச், 2022

சிலுவையினின்று பரதீசு

*சிலுவையினின்று பரதீசு*

by : Eddy Joel Silsbee

 

பரலோகத்திற்கு அழைத்து செல்ல வல்லவரான கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

செய்த குற்றத்திற்காக மரணதண்டனை பெற்று சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த கள்ளன் *பரதீசிற்கு எப்படி போனான்?*

அவன் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டானோ? ஆகவே, எனக்கும் ஞானஸ்நானம் தேவையில்லை என்று அடம் பிடிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

 

ஆனால்,

ஒரு குற்றமும் செய்யாத தேவக்குமாரன் கிறிஸ்துவுடன் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த கள்ளனை குறித்து அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் கவனியுங்கள் :

 

* இயேசுவை - *தேவன்* என்று உணர்ந்திருந்தான் !! லூக். 23:40

 

* தான் பாவம் செய்தவன் என்று உணர்ந்தவன் !! வ41

 

* இயேசு குற்றமற்றவர் என்று அறிந்தன்.  !! வ41

 

* இயேசுவை *தன் ஆண்டவராக ஏற்றுக்கொண்டான்* !! வ42

 

* பரலோக இராஜ்யம் உண்டென்பதை அறிந்திருந்தான் !! வ42

 

* தன் உலக வாழ்க்கை முடிந்து தான் மரிக்கப் போவதை அறிந்தும், *மறு வாழ்வு உண்டு* என்று நம்பினான் !!  42

 

இத்தனை தகுதிகளையும் கொண்டிருந்த அந்தக் கள்ளனை:

பாவங்களை மன்னிக்கும் வல்லமையும் அதிகாரமும் உடையவரான கிறிஸ்து இயேசு அவனுடைய பாவத்தை மன்னித்து பரதீசுக்கு அழைத்து சென்றார் !! (மத். 9:6)

 

சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து;

உயிர்தெழுந்தபின் தனது சீஷர்களுக்கு இட்ட கட்டளை : *பாவங்கள் மன்னிக்கப்பட ஞானஸ்நானம் எடுக்க சொன்னார்* !! மத். 28:18-19

 

சிலுவைக்கு முன்னர் இந்தக் கட்டளை கொடுக்கப்படவில்லையென்பதை நாம் உணரவேண்டும் !!

 

ஆகவே, நித்தியக் கட்டளைக்கு கீழ்படிய இன்னும் யோசிக்க வேண்டாம் !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/KsbhW4pM_7g

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக