திங்கள், 28 மார்ச், 2022

மீறுதலின் இழப்பும் இரட்சிப்பின் லாபமும்

*மீறுதலின் இழப்பும் இரட்சிப்பின் லாபமும்*

by : Eddy Joel Silsbee

 

இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

அந்த கனியை புசிக்க வேண்டாம் என்று ஆதாமிடத்தில்தேவன் சொன்னார். அப்போது ஏவாள் உருவாக்கப்ட்டிருக்கவேயில்லை. (ஆதி. 2:15-18)

 

தான் மீறின போதோ *ஏவாள் மீது பழியைப்போட்டார்* ஆதாம். (ஆதி. 3:12)

 

ஏவாளிடத்தில் விசாரித்தப் போதோ *சர்ப்பம் மீது பழியை போட்டார்*. (ஆதி. 3:13)

 

தன்னை கவனிக்காமல் *மற்றவர் மீது பழியை போடுவது*, தொடக்கத்திலிருந்தே பிசாசு திணித்த ஒரு குணம்.

 

ஆரம்பத்தில் தேவனோடு;

அன்பாகவும், நேரடியாகவும், நண்பனாகவும் உறவாய் பழகின ஆதாம், பாவம் செய்த பொழுதோ நேருக்கு நேர் தேவனுடன் உறவாடுவதை தவிர்த்து மறைந்து கொள்கிறார் !!  (ஆதி. 3:10)

 

ஆம், பாவம் நம்மில் இருந்தால் தேவனுடன் நெருங்கி செல்வது கடினம்.

 

பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். யோ. 3:20

 

குற்றம் செய்யாமலும், மற்றவர் மீது பழியைப் போடாமலும், செய்த தவறை சமாளித்து மாறி நில்லாமல், அந்தக் குணத்தைக் களைந்து, உண்மையை உணர்ந்து தவறுகளை சரிசெய்துக்கொண்டு, மனந்திரும்பி, செய்த பாவத்தினிமித்தம் நம்மைப் படைத்த பிதாவினிடமிருந்து பாவத்தினிமித்தும் தூரம் சென்ற நாம், மீண்டும் தகப்பனிடம் சேரும்படியாக இயேசு கிறிஸ்து அனுப்பப்பட்டார். எபே. 2:18, 1பேதுரு 3:18

 

கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிந்த கிறிஸ்தவர்களாகிய நாம் பாவத்திலிருந்து விடுதலைபெற்று இரட்சிக்கப்பட்டதால்;

பிதாவின் அன்பை ருசிபார்க்கவும், கிறிஸ்துவின் அன்பை அனுபவிக்கவும் தைரியமாய் கிருபாசனத்தண்டை சேர அழைக்கப்பட்டுள்ளோம். எபி. 4:16

 

இரட்சிக்கப்பட்டவர்களது பாதையின் இறுதி எல்கை “பிதாவினிடம் போய் சேர்வதே”.

 

அதற்கான பாதையை கிறிஸ்துவே நமக்கு வகுத்து கொடுத்திருக்கிறார். கிறிஸ்துவையல்லாமல் வேறு எந்த வழியுமே இல்லை. யோ. 14:6

 

பிதாவானவர் சகலத்திலும் சகலமாக இருப்பதாலேயே, கிறிஸ்துவின் மூலமாக நாம் பிதாவான தேவனை மகிமைப்படுத்துகிறோம். நமது அனைத்து வேண்டுதல்களும் அவரிடமே சமர்பிக்கப்படுகிறது. அதன் நிமித்தமே, நமது துதிகளும் ஸ்தோத்திரங்களும் பிதாவிற்கு செலுத்த கடமைப்படுகிறோம்.  யோ. 16:28, 1 கொரி. 15:28; 3:23; 11:3

 

ஆகவே, உன்னதமான இந்த உறவை மீண்டும் சீரமைக்க ஏற்படுத்தப்பட்ட மேன்மையான இரட்சிப்பின் பாதையை சொற்ப உலக ஆயுசு நாட்களுக்காகவும் லாபத்திற்காகவும் உதாசீனப்படுத்தினால், நித்திய நித்திய காலமாய் வேதனையில் தகிக்க நேரிடும் என்பதை உணர்ந்து காலதாமதமில்லாமல் இரட்சிப்பிற்குள் நுழைந்து அதில் நிலைபெறுவோம்.

 

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. பிலே. 3

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/mY7i0PIA2lw

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக