*திருமணம் செய்துக்கொள்வது ஆசீர்வாதம்*
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் தாமே நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பது பரிசுத்த வாழ்க்கை என்றும், சில ஆகாரங்களை ஒதுக்கினால் பரிசுத்தம் என்றும் சிலர் சொல்வதும் கடைபிடிக்கிறவர்களும் உண்டு.
சிறிது வயது மூப்படைந்ததும், தங்களது கொள்கையினால் அவர்களை அம்மா அப்பா (Mother, Father) என்ற கவுரவ பதவி உயர்வு கொடுத்து மதித்து அழகு பார்க்கின்றனர்.
ஆனால், வேதாகமத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்; குறிப்பாக 1தீமோ. 4:1-3ம் வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதின நிருபத்தில் சொன்ன வரிகள் நெருடுகிறது !!
தெளிவாய் வேதாகமம் சொன்னாலும்,
தனக்கு பிடித்த கொள்கையில் இருந்தால்,
கிறிஸ்து நியாயந்தீர்க்க வரும்போது என்னவாகும்?
பணத்திற்காக அல்ல, கவுரவத்திற்காக அல்ல, வேலைக்காகவும் அல்ல, வாழ்க்கையின் சில சூழ்நிலையினால் விரக்தியில் எடுத்த முடிவாக இல்லாமல், தேவனுடைய திட்டத்திற்கு எதிர்த்து நிற்காமல்,
தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து,
அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து,
சத்தியத்தில் நிலைத்து நிற்கும்படியாக,
தங்கள் நடவடிக்கையும், கொள்கையும், வாழ்க்கையையும் வேதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை.
தேவனே நமக்கு கட்டளையிட்ட சமாதானமான ஆசீர்வாதமான நம்மையான வாழ்க்கையை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?
திருமணம் செய்துக்கொள்வது பாவமல்ல… அது ஆசீர்வாதம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக