*பலவருட பழக்கத்தை வேதத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கவும்*
by : Eddy Joel Silsbee
பெலப்படுத்துகிற கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பாடுகளும், போராட்டங்களும், துன்பங்களும், நெருக்கங்களும் இல்லையென்றால் - அது உலகம் இல்லை.
இந்த உலகத்தில் ஜீவித்திருக்கும் எல்லா காலத்திலும் இவை எல்லாம் நிச்சயம் இருக்கும்.
சமாதான நாட்களை பார்த்த நாம் சங்கடமான நாட்களையும் பார்க்கும் போது சங்கடமாக இருக்கத்தான் செய்கிறது.
ஆனாலும், இவைகள் இதோடு நிற்பதல்ல;
இன்னும் அதிகமான பொல்லாத நாட்களுக்கும் தயாராக வேண்டும்.. கிறிஸ்துவின் 2ம் வருகைக்கு முன்னர் இவை எல்லாம் இன்னும் அதிகம் நடக்கும் என்றே கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு *ஆரம்பம்*. (மத் 24:7-8)
உண்மையைப் போல இருந்தாலும் – அது பொய்யானதாயிருக்கும்.
பரிசுத்தம் என்று அழைத்துக்கொண்டாலும் – வேதத்துடன் ஒப்பிட்டால் அது அசுத்தமாயிருக்கும்.
பரலோக பாதை என்று நினைத்து பிரயாணிக்கும் பாதையோ - வேதத்துடன் ஒப்பிட்டால் அது நரகத்திற்கு போவதாயிருக்கும்.
தொழுகை முறையிலும், பாடல் முறையிலும் வேதத்துடன் ஒப்பிட்டால் வேறுபாடுள்ளதென்று கண்டாலும்; இதுவரை கடைபிடித்த, அல்லது மனதிற்கு பிடித்த முறைகளை விட்டு வெளியேறி சரியான வேதாகம பாதையில் நிற்க மனமில்லாமல் பழைய பாதையிலேயே தொடர்ந்து செல்வது இப்போதைய தன்மையாகிப்போனது!
சகலவற்றையும் வேதத்துடன் ஒப்பிட்டு சோதித்து பாருங்கள்.
தங்களது செயல்பாட்டை வேதத்துடன் ஒப்பிட்டு பார்க்க மனமில்லாததாலேயே மூன்றரை வருடம் கிறிஸ்துவோடு கூடவே இருந்தும்; பரிசேயர்களும் நியாயசாஸ்திரிகளும் வேதபாரகர்களும் இரட்சிப்படையாமல் போனதற்கு காரணம்.
ஆராய்ந்து பார்ப்போம். பல வருடங்கள் ஊறிப்போயிருந்தாலும் பழக்கங்களை உதறிபோட்டுவிட்டு வேதத்திற்கு திரும்புவோம்.
அப்போது தேவன் ஆசீர்வதிப்பார்.
வரும் உபத்திரவத்தை சரிபார்த்து சரியான சத்தியத்தில் நிலைத்திருந்தால் “…நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே”. (யாக். 5:8)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/LYBoVat0XtB1uolEXKg0sA
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக