சனி, 19 மார்ச், 2022

பொறுமையில் பாதுகாப்பு

*பொறுமையில் பாதுகாப்பு*

by : Eddy Joel Silsbee

 

எந்த நேரத்திலும், எப்போதும் நம்மை பாதுகாக்கும் தேவனின் நாமத்திற்கே சகல துதியும் உண்டாவதாக.

 

நாம் வானத்தில் பறந்தாலும்,

கடலில் பிரயாணம் செய்தாலும்,

பாதாள சுரங்கத்தில் வேலை செய்தாலும்,

அயர்ந்த தூக்கத்தில் இருந்தாலும்,

ஆண்டவராகிய கிறிஸ்து நம்மை எப்போதும் பாதுகாக்கிறவர்.

 

எத்தனை வகையிலும்

எந்த மார்க்கமாகவும் விரோதிகள் நமக்கெதிராய் வந்தாலும்,

வல்லமையுள்ள தேவன் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை.

 

விசுவாசத்தையும்,

அன்பையும்,

நீடிய பொறுமையையும்,

அமைதியையும்,

நாம் காக்கும் போது,”

நிச்சயமாய், சகல துன்பத்திலிருந்தும் *தேவன் நம்மை விலக்கிப் பாதுகாப்பார்*.

 

நான் வானத்திற்கு ஏறினாலும்,

நீர் அங்கே இருக்கிறீர்;

நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும்,

நீர் அங்கேயும் இருக்கிறீர்.

நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,  

அங்கேயும் உமது கை என்னை நடத்தும்,

உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். சங். 139:8-10

 

நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான் !! …

அவரிடம் நமது விஷயங்களை ஒப்புவித்து விட்டு *பொறுமையாயிருங்கள்* !! பிலி. 4:6

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FW8FhKXkNJv6VhkmyK4QYg

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/QA8ql-cXXI4

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக