*நாளானது சமீபித்து வருகிறது*
by : Eddy Joel Silsbee
ஆராதனைக்கு பாத்திரரான ஒரே தேவனாகிய நம் பரம பிதாவிற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
எபி. 10:25 படிக்கும் போதெல்லாம், சபை கூடிவருதல் என்பதை மாத்திரம் பார்த்து கடந்து விடுகிறோமோ என்ற அச்சம் உள்ளது. அந்த வசனத்தின் இரண்டாவது பகுதியையும் நாம் கவனிக்க தவறக்கூடாது.
முழு வசனத்தையும் கவனிக்கவும்:
எபிரேயர் 10:25 “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; *நாளானது சமீபித்து வருகிறதை* எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்லவேண்டும்”
மேலேயுள்ள பார்த்த வசனத்தின் இரண்டாவது பகுதி:
கர்த்தருடைய நியாயதீர்ப்பு நாள் அருகாமையில் வந்துக்கொண்டிருக்கிறதே.
நான் இன்னும் பரிசுத்தப்படவேண்டிய காரியத்திற்கு தேவையான ஆத்தும உணவை சபையாக கூடி பெற்றுக்கொள்ள வேண்டுமே.. அதற்கு
இன்னும் 7 நாள் இருக்கே,
இன்னும் 6 நாள் இருக்கே,
இன்னும் 5 நாள் இருக்கே..
இன்னும் 4 நாள் இருக்கே.. என்று நாள் நெருங்க நெருங்க கர்த்தருடைய நாளை எதிர்நோக்கி ஆவலோடு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும்..
தொழுகைக்கு வாருங்கள் என்று சனிக்கிழமையன்று தொலைபேசியிலும் வீட்டிற்கு சென்றும் நினைவுப்படுத்த வேண்டிய பரிதாப நிலையில் கிறிஸ்தவ வாழ்க்கை இன்னமும் உள்ளது சிலருக்கு…
கடைசி நேரத்தில் ஒரு “முக்கியமான வேலை வந்துவிட்டது” ஆகவே, அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சாக்கு சொல்வது பெருகிவிட்டது. ஊழியரை கனப்படுத்த அல்ல கூடுவது…
தேவாதி தேவன் நம் வாழ்க்கையில் செய்த நன்மைக்காக, கொடுத்த ஜீவனுக்காக நன்றி செலுத்தவும் கூடுகிறோம் என்பதை மறக்கக் கூடாது !!
கர்த்தருடைய நாளில் (ஞாயிறு) தேவனை ஆராதிக்க தவற வேண்டாம்.
நமக்காக கிறிஸ்து காயப்பட்டு முழு இரத்தத்தையும் சிந்தி தனது உயிரையும் கொடுத்தார். இரட்சிப்பை இலவசமாக வழங்கினார்.
நமக்கோ, இரண்டு மணி நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு பிஸி !!
ஒரு தீவிர தேவை வாழ்வில் வந்துவிட்டால், உடல் வலி இருந்தாலும் நேர் முழங்காலில் நின்று ஜெபிக்க நேரம் உடனே வந்துவிடுமே அதெப்படி?
வாரத்தின் முதல் நாளில்(ஞாயிறு), அவரை தொழுது கொள்ள மடித்து ஏதாவது சாக்கு போக்கு காரணங்களை சொல்லி வீட்டில் முடங்கி கிடந்தால் தானும் பிஸி என்று நாம் ஏறெடுக்கும் ஜெபத்தை தேவன் தவிர்த்து விட்டால் என்னவாகும்?
சாக்கு போக்கு சொல்லாமல்,
புறப்படும் நேரத்தில் உறவினரோ அல்லது நண்பர்களோ வந்தால் அவர்களையும் கூட்டிக்கொண்டு உற்சாகமாக வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தேவனை தொழுது கொள்ள சபையாய் கூடுவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/FW8FhKXkNJv6VhkmyK4QYg
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக