*எட்ட முடியாத தூரத்திற்கும் முனகல் சப்தம்*
by : Eddy Joel Silsbee
தூரத்திற்கும் சமீபத்திற்கும் தேவனாகிய சர்வ வல்லவரின் நாமத்திற்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக !!
விஞ்ஞானிகள் வானத்தில் எட்டின அளவு வரை கடைசியாக கண்டு பிடித்தது PSR B1509-58 என்று பெயரிடப்பட்ட ஒரு பகுதி.
ஒரு கையைப் போல அது காணப்படுவதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி சொல்கிறது.
அந்த இடம் பூமியிலிருந்து 160,832,423,211,032,540 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது !! அதாவது 17,000 ஒளி வருடம் (Light years).
1 நொடிக்கு 3,00,000 கி.மீ வேகத்தில் பிரயாணித்தாலும் இந்த இடத்தை சென்றடைய 17,235 வருஷங்கள் ஆகும் !! வழக்கமாக நமது வாகனம் 100 கி.மீ வேகத்தில் பறக்கிறது.
தரையிலிருந்து வானத்தில் கொஞ்ச தூரம் விமானம் பறந்ததும் கீழே பூமியிலிருக்கும் மிகப்பெரிய மாளிகைகள் கூட ஒரு புள்ளி போல தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. எவ்வளவு கவனமாய்த் தேடினாலும் மனிதர்களைக் காணமுடியாது.
அப்படியிருக்கும் போது விஞ்ஞானிகளாலும் தொலை நோக்கிகளாலும் காணவே முடியாத தொலைதூரத்தில் இருக்கும் பரலோகம் எவருமே கணக்கிடமுடியாத தூரத்தில் இருக்க வேண்டும் !!
இருந்தபோதும் நம் ஜெபமும் விண்ணப்பமும் காதுகளில் எட்டக்கூடிய அளவிற்கு நம் அருகே நின்று கவனிக்கிறார் வானத்திலிருக்கும் தேவன் என்றால் “நாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள்”… எழுதும் போதே என் உடம்பு சிலிர்க்கிறது !!
என் அன்பின் பிதாவே, தேவனே, மாட்சிமை நிறைந்தவரே “மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்”? யோபு 7:17-18
அப்பா உம் கிருபை எவ்வளவு பெரியது... உம் நாமம் வாழ்க.
அப்பேற்பட்ட உன்னதமானவரின் வார்த்தைக்கும் கட்டளைக்கும் நமது செவியை சாய்த்து கீழ்படிய யோசிக்கவேண்டுமோ?
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/Jph4q7vNQm0
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக