*இரக்கம் & கிருபை – வித்தியாசம் என்ன?*
by : Eddy Joel Silsbee
இரக்கமும் கிருபையும் நிறைந்த தேவனுடைய நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
நம் தேவன் இரக்கமும் கிருபையும் உள்ளவர். தீத்து 1:2
தேவனுக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களை எண்ணிப்பார்க்கும் போது, இரக்கமுள்ள தேவனால் மாத்திரமே எப்படிபட்ட சூழ்நிலையிலும் நம் மீது இரக்கமும் கிருபையும் காட்டமுடிகிறது என்பதை அறியலாம்.
இரக்கமும் - கிருபையும் இருவேறு வார்த்தைகள்.
இரண்டிற்கும் இருவேறு அர்த்தம் உள்ளது.
1-
மனந்திரும்பியபோது செய்த தவறுக்காக தண்டிக்காமல் விடுவது *இரக்கம்*.
கணவனோ மனைவியோ இரத்த சம்பந்த உறவுகளோ ஒருவருக்கொருவர் விரோதமாக அல்லது ஆதாரமற்ற,
பொருட்படுத்தக் கூடாத சிறிய விஷயத்திற்கும் கூட குறிப்பிட்ட சூழ்நிலையில் அன்பு செலுத்த “யோசிப்பார்கள்”.
அரசாங்கமோ, அதிகாரியோ, நீதிமன்றமோ, உள்ளூர் பஞ்சாயத்தோ கூட கொடுக்க முடியாததை தேவனால் மாத்திரமே செய்யமுடிகிறது..
ஆம்… நாம் செய்த பாவத்தை மனிதன் சட்டரீதியாக மன்னித்தாலும், பரலோக சட்டத்திற்கு உட்பட்டு மனந்திரும்பாத பட்சத்தில் நிச்சயமாய் அவைகள் ஜீவ புஸ்தகத்தில் அம்மனிதனின் தண்டனைக்கென்று கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் !!
ஆனால் இரக்கமுள்ள தேவனோ, நம் மீது பாராட்டின அன்பின் காரணத்தால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பி கீழ்படிந்தால் *தண்டனையில்லாமல்* நாம் செய்த தவறை முழுவதுமாய் மன்னிக்கிறார். அதற்கு பெயர் *இரக்கம்*.
2-
தண்டனைக்குறிய தனது செயலை உணர்ந்து ஒப்புக்கொண்டு மனந்திரும்பிய போது; அதை மன்னித்தது மாத்திரமல்லாமல்;
மேன்மையான தகுதியை அம்மனிதனுக்கு கொடுப்பது *கிருபை*.
பாவத்தில் இருந்த நம்மை மீட்டு எடுத்து,
சுய முயற்சியில் வாங்கவே முடியாததையும்;
பெரிய மனுஷனாக உலகிலிருந்தாலும் பரலோகம் என்ற ஒரு இடம் செல்ல முடியாததும், அங்கு சென்று கடவுளின் அருகில் உட்காரும் தகுதியை சம்பாதிக்க முடியாததையும்; எந்த தகுதியுமேயில்லாத மனிதனை பரிசுத்தப்படுத்தி தன்னுடன் இருக்கதக்கதாக தமது அருகாமையிலேயே நமக்கு ஒரு இடத்தை ஒதுக்குவது தேவனுடைய *கிருபை* !! அல்லேலுயா !!
வாழ்நாள் முழுதும் சம்பாதித்ததை சேர்த்துக்கொடுத்தாலும் பரலோகத்தில் ½ சென்ட் நிலம் கூட எவராலும் வாங்க முடியாது.
ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் சித்தத்தின்படி வாழ்பவர்களுக்கு ஒரு ஸ்தலத்தையே கொடுக்கிறேன் என்றது – *தேவனுடைய கிருபை* (யோ. 14:2)
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் என்று எபே. 2:5ல் காண்கிறோம்.
எந்த தகுதியுமேயில்லாமல் / வாங்க திராணியில்லாத போதும் விலைமதிக்கமுடியாத *விலையேறப்பெற்றதை இலவசமாய் நமக்குத் தருவது அவருடைய கிருபை*.
நரகத்தில் தள்ளப்பட தகுதியுள்ள நம்மை;
கிறிஸ்துவின் மூலமாக நம்மை மன்னித்து;
பரலோக பிள்ளைகளாய் நம்மை மாற்றியது அவர் நம்மீது காண்பித்த *கிருபை* !!
ஆம்….
*தண்டனைக்கு பாத்திரமாயிருந்தும் தண்டிக்காமல் விடுதலை செய்வது இரக்கம்*.
*எள்ளளவும் தகுதியில்லாத பொழுதும் நமக்கு உன்னதமானதை தருவது கிருபை*.
அளவிடமுடியாத தேவனுடைய இரக்கத்திற்காகவும் அவரது கிருபைக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துவோம். அவரை உத்தமமாய் பற்றிக்கொள்வோம்.
நம்மை இன்னும் மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக