*சாம்பல் புதன்?*
by : Eddy Joel Silsbee
எண்ணி முடியாத நம்முடைய தேவனின் நாமத்திற்கே மகிமையும் கனமும் உண்டாவதாக..
மஸ்கட்டில் இருந்தபோது 14-02-2018னன்று அலுவலகத்திற்கு காலையில் புறப்பட்ட பொழுது சாலையோரமாக அநேக இந்தியப் பெண்கள் தங்கள் நெற்றியில் சாம்பல் பூசிக்கொண்டு கொத்தாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரவு முழுவதும் தங்கள் கோவிலில் ஒன்றாய்க் கூடியிருந்து பிரத்யேக தங்கள் மதபூஜையை முடிந்து சாமியை தரிசித்து காலையில் வீட்டிற்கு கணவனைக் காண திரும்புகிறார்கள் என்றறிந்தேன்...
தொடர்ந்து சென்ற பொழுது அடுத்து வெகு அருகாமையிலுள்ள கிறிஸ்தவர்கள் கூடி ஆராதிக்கும் கட்டிடத்திலிருந்து வெளிவந்த ஆண்களும் பெண்களும் தங்கள் நெற்றியில் சாம்பலை பூசிக்கொண்டு *சாம்பல் புதன்* என்ற ஒரு பண்டிகையைச் சொல்லி வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டிருந்தார்கள் !!
மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நிகழ்வுகளுக்கும் சம்பந்தமேயில்லையென்றாலும் இஸ்ரவேலர்கள் தங்களது வாழ்க்கையில் செழிப்பாய் வளர்ந்த பொழுது பலப்பட்டு *தேவனை மறந்த* சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது (2நாளா. 12:1).
தனது ஊழிய நாட்களை நாற்பது நாள் உபவாசமிருந்து இயேசு கிறிஸ்து துவங்கினதை இவர்களும் தங்களது வாழ்க்கையில் வருடந்தோரும் அந்த உபவாசக் காலத்தை துவங்கும் நாள் இது.
கடந்த வருடம் எந்த தேதியில் சாம்பல் புதன் கொண்டாடினார்கள் என்று கேட்டால் காலண்டரை காணாமல் இவர்களால் சொல்லமுடியாது !! ஏனென்றால் இப்படிப்பட்ட சடங்குகளின் தேதியை நிர்ணயிப்பது அமாவாசையும் பவுர்ணமிகளுமே !!
லெந்து நாட்கள், சாம்பல் புதன், குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன், பெரிய வெள்ளி, ஈஸ்டர் தினம் என்ற அத்தனை பண்டிகைகளுமே அமாவாசையும் பவுர்ணமிகளையும் வைத்தே என்பதை நீங்கள் அறியவேண்டும்.
… நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன் என்ற ஏசா. 1:13-14 வசனம் நினைவில் வரவேண்டும்.
இவ்வசனத்தில் வரும் மாதப்பிறப்புகள் என்பது பவுர்ணமியை சொல்கிறது !!
*இந்த தேதிகளை எப்படி நிர்ணயிக்கிறார்கள்?*
ஒவ்வொரு வருடமும் மார்ச் 21ம் தேதியை மையமாக வைத்து அந்த தேதிக்கு பின் வரும் பவுர்ணமியை அடுத்து வரும் ஞாயிறு தினத்தை ஈஸ்டர் என்று தீர்மானிக்கிறார்கள்.
ஈஸ்டர் என்று குறித்த நாளின் முந்தய வியாழன் மற்றும் வெள்ளியை பொிய வியாழன் பொிய வெள்ளி என்றும் கணக்கிடுகிறார்கள்.
அந்த ஞாயிற்றுகிழமையிலிருந்து பின்னோக்கி உள்ள 40வது நாளை லெந்து நாட்களின் துவக்கம் என்று குறிக்கிறார்கள்.
கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்:
சாம்பல் புதன் – ஈஸ்டரிலிருந்து 46 நாள் முன்னர்
குருத்தோலை ஞாயிறு – ஈஸ்டருக்கு 7 நாள் முன்பு – அதாவது முந்தய ஞாயிறு
பெரிய வியாழன் – ஈஸ்டருக்கு 3நாளுக்கு முந்திய நாள்
பெரிய வெள்ளி - ஈஸ்டருக்கு 2நாளுக்கு முந்திய நாள்
பரமேறிய நாள் – 39வது நாள் ஈஸ்டர் கழித்து
பாலையும் ஜூஸையும் மோரையும் குடித்து நாற்பது நாள் உபவாசத்தை இயேசு கழிக்கவில்லை !!
*எனது கட்டளைகளை* பின்பற்றுங்கள் என்று கிறிஸ்து சொன்னதை மறந்து *அவரது செயல்களை* பின்பற்றுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கொஞ்சம் முத்தினால் கடைசியில் வருடந்தோரும் சிலுவையில் தங்களைத் தாங்களே அறைந்தும் கொள்வார்களோ?
மனிதச் சடங்குளைக் களைந்து கிறிஸ்துவின் சத்தியத்தை பற்றிக்கொள்ள வேண்டும்.
சடங்குகளும் சம்பிரதாயங்களும் சரீர ஒடுக்கத்திற்கு உதவும்..
பரலோகம் கொண்டு சேர்க்காது !!
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்ற லூக்கா 13:24 வசனம் நம்மை நிதானிக்க அழைக்கிறது.
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கென்று சொல்லப்படாத எந்த பழக்கத்திற்கும் விலகியிருப்போம்.
சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ரோ. 15:33
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக