*கன்..னாவ்*
by : Eddy Joel Silsbee
நமக்காய் பரிதபிக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எபிரேய வார்த்தைகளில் தேவனுடைய தன்மையை பார்த்து வருகிறோம். இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.
இன்று பார்க்கும் வார்த்தை *கன்..னாவ்*
ஆங்கிலத்தில் : kan-naw'
தமிழ் அர்த்தம் : எரிச்சலுள்ள / வைராக்கியமான தேவன்
பழைய ஏற்பாட்டில் ஆறு முறை காண முடிகிறது !! முதலில் யாத். 20:5ல் வருகிறது.
மற்ற இடங்களில் வரும் வசனங்கள் : யாத். 34:14; உபா. 4:24; 5:9; 6:15
கன்னாவ் என்பது "பொறாமை", "எரிச்சல்" அல்லது "வைராக்கியம்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அடிப்படையாக இவ்வார்த்தை திருமண உறவுடன் தொடர்புடையது.
தேவன் இஸ்ரேலின் கணவராக சித்தரிக்கப்படுகிறார்; அவர் ஒரு பொறாமை கொண்ட கடவுள், நம்முடைய எல்லாப் புகழையும் அவருக்காகவே விரும்புகிறார், வேறு எவருக்கும் விடுவதில்லை.
தனது மனைவியானவள் தனது புருஷனைப் புகழாமல் வேறு ஆண்களைப் புகழ்ந்தாலோ அல்லது அவனைப் பற்றிக்கொண்டாலோ, இந்தக் கணவன் வெறுமனே போகட்டும் என்று அவளை விடுவானோ?
ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான். அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான். நீதி. 6:34-35
கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். யாத். 34:14
படைத்த தேவனை விட்டு, கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு வரைந்த படத்தையும் மனிதன் செய்த விக்கிரகத்திற்கும் முன்பதாக தலை வணங்கி கைக்கூப்பி நின்றால் வெறுமனே சும்மா விடுவாரோ?
நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள உறவையும், நேரத்தையும் ஒருபோதும் மற்றவருக்கு விட்டு கொடுக்க தேவன் விரும்புவதில்லை. "எரிச்சலுள்ள தேவன் அவர்"
முழு இருதயத்தோடும், முழு மனதோடும் என்கிற வசனம் இப்போது ஞாபகம் வருகிறதா?
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக