#1125 – *இயேசு கிறிஸ்து ஊழியம் செய்த காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் வாழ்ந்தாரா? அவரை சந்திக்கும் வாய்ப்பு இல்லாது போனதா?*
*பதில்* கிறிஸ்துவின் மூன்றரை வருட ஊழியத்தின் போது பவுல் எப்போதாவது இயேசுவை சந்தித்தாரா என்பதை ஊர்ஜிதமாக சொல்வதற்கு வேதத்தில் நேரடி குறிப்புகள் இல்லை.
மறைமுகமான சில குறிப்புகளின் மூலம் பவுல், இயேசு கிறிஸ்துவை பார்த்திருக்க வாய்ப்புள்ளது என்பது எனது சொந்த கருத்து.
எப்படியெனில்;
1- பவுல் சிறுவயதில் எருசலேமில் வசித்தவர் (இந்த நகரத்தில் என்று சொல்வதைக் கவனிக்கவும்) அப். 22:3
2- ஸ்தேவானின் கல்லெறிதலை அங்கீகரிப்பதற்காக அங்கே இருந்தவர் (அப். 8:1).
3- பவுலின் மருமகன் எருசலேமில் இருப்பதால் (அப். 23:16) பவுலும் அவருடைய குடும்பத்தினரும் சில காலம் அங்கு தங்கியிருந்ததைக் குறிக்கிறது.
4- நியாயபிரமாணத்தின்படி பக்தி வைராக்கியமாக இருந்த பவுல், பஸ்காவின் போது எருசலேம் தேவாலயத்தில் வராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. கலா. 1:14
4- இயேசு பல முறை எருசலேமுக்கு சென்றதை நாம் அறிகிறோம். குறிப்பாக பஸ்காவின் போது அங்கு அவர் இருந்தார் என்று வசனம் நமக்கு சொல்கிறது. மாற்கு 11:11; யோ. 2:13; 5:1.
இயேசுவின் எந்த அற்புதங்களும் மறைமுகமாகவோ இரகசியமாகவோ சொந்த மேடையிலோ அந்தரங்க அரங்கத்திலோ நடைபெறவில்லை. அப்பட்டமாக வெட்ட வெளிச்சத்தில் மக்கள் மத்தியில் நடந்தேறியது. அப். 26:26
அவரைச் சுற்றிலும் இரவும் பகலும் திரளான ஜனங்கள் இருந்தனர். மத். 8:18
இயேசுவின் இப்பயணங்களில் பவுல் இயேசுவைப் பார்த்திருக்கலாம் அல்லது அவரது பேச்சைக் கேட்டிருக்கலாம்.
நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மாம்சத்தில் இயேசுவை பவுல் பார்த்திருந்தாலும் அதில் எந்த மேன்மையும் இல்லையென்பதே !! (2கொரி. 5:16)
இவ்வசனத்தின்படியாக ஒருவேளை நேரடியான சந்திப்பு இருந்திருக்கலாம் என்று தோன்றினாலும் அதில் எந்த முக்கியத்துவமோ அல்லது ஊர்ஜிதமோ சொல்லப்படவில்லை.
மேலே பதியப்பட்ட இக்கருத்துக்களின் அடிப்படையில் நாம் யூகிப்பது மாத்திரமே.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----
செவ்வாய், 8 பிப்ரவரி, 2022
#1125 – இயேசு கிறிஸ்து ஊழியம் செய்த காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் வாழ்ந்தாரா? அவரை சந்திக்கும் வாய்ப்பு இல்லாது போனதா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக