திங்கள், 28 பிப்ரவரி, 2022

வாயில் சத்தியம் கிரியையில் பூஜ்யம்

*வாயில் சத்தியம் கிரியையில் பூஜ்யம்*

by : Eddy Joel Silsbee

 

சிட்சித்து நேர்த்தியாய் வழிநடத்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

சகல வசதியும், செழிப்புடனும் சோதோமுக்கும் கோமோராவுக்கும் *ஏதேன் தோட்டத்தை போல* இருக்கும்படியாக ஆண்டவர் கிருபை பாராட்டினார் என்று வேதம் சொல்கிறது !!  ஆதி. 13:10

 

ஆனால் அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை மறந்து அனைத்து அநியாயங்களும், புரட்டுகளும், பித்தலாட்டமும், வயது வித்தியாசம் பாராமல் விபசாரமும், வேசித்தனமும், *மனித மாமிசம் அல்லாத அந்நிய மாம்சத்தைக்கூட விட்டுவைக்க முடியாத அளவிற்கு காமம்*, அவ்வூரில் 10 உத்தமன் கூட இல்லாமல் போகும் அளவிற்கு பாவம் பெருகி போனது (ஆதி. 18:20, யூதா 1:7) … முடிவு என்ன? அழிக்கப்பட்டார்கள் !!

 

வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கும் தேவன் சகலத்தையும் நன்மையாய் வாய்க்கச் செய்துக் கொண்டிருக்க; அதை தேவனே நமக்கு சகலத்தையும் முன்னின்று நடத்தி நம்மை ஆசீர்வதிக்கிறார் என்பதை அறிந்தும்;

 

சொந்த திறனாலும் திறமையினாலும் ஜனங்களைத் தனது வழிக்கு இழுத்து, வாயில் சத்தியம் கிரியையில் பூஜ்யமாக ஊழியர் என்னும் வரட்டு கவுரவத்தில், பிரயோஜனமில்லாத வரண்ட மேகங்கள் போல மிடுக்கான ஜெபத்துடன் ஊருக்கு ஊழியராக வெத்து வேஷம் போட்டு அன்பை கிரியையில் காண்பிக்கத் தெரியாத கஞ்சத்தனத்துடன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படியாமல் ஒரு சாரரும்;

 

தேவன் சொன்னார் என்று தன் விருப்பத்தைத் தீர்க்கதரிசனமாக உரைத்து, தனது பணப்பையிலிருந்து ஒரு நயா பைசாவும் செலவு செய்யாமல் சபையாரிடம் வசூலித்து செலவு செய்யும் பண லாபம் ஈட்டும் ஊழியர்களது சுய நலம், அன்பின்மை என்று இப்படிப்பட்ட காரியங்களால் சோதோம் கொமோராவையும் மிஞ்சும் அளவிற்கு வெகுவாக இக்காலங்களில் பார்க்க முடிகிறது... !!

 

ஜெபிக்கிறோம் என்று தங்களது கடமையை நிறுத்திக்கொள்ளாமல், உண்மையாகவே நெருக்கத்திலிருப்பவர்களுக்கு தங்களால் முடிந்த கிரியையும் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து,

பட்டங்களும், கவுரவ பதவிகளும், பெருமைகளும், வேஷங்களும், அங்கீகார தேடலில் கிறிஸ்தவத்தையும் கடந்து வளர்ந்து செழித்து இருப்பதை… தோட்டக்காரர் தன் வேலையை துவங்கினால்? யோ. 15:1-2

 

கிரியையில் காண்பிக்காமல் வெறுமனே ஜெபம் செய்பவர் மூச்சற்ற சடலமே !!

 

கிறிஸ்துவின் பரிந்து பேசுதல் காலாவதியாவதற்கு முன்பும், தோட்டக்காரர் செயலில் இறங்குவதற்கு முன்பும் மனந்திரும்புவோம்.

 

நம்முடைய பிற்கால சந்ததி ஆசீர்வதிக்கப்படவேண்டும். சங். 32:8, மத். 7:21

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/lM17toYc4b4

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக