வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

கர்த்தருக்குக் கீழ்படியமாட்டாயோ?

*கர்த்தருக்குக் கீழ்படியமாட்டாயோ?*

by : Eddy Joel Silsbee

 

நம்மோடு என்றென்றும் இடைபடும் மீட்பரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தேவனுக்கு பிரியமில்லாதவை எவைகளென்று

*தெளிவாய் சொன்ன பின்பும்*,

சுய ஆவலும்,

சுய விருப்பமும் தன்னில் உந்தப்பட்டதால்,

தன் இஷ்டப்படியே போனார் பிலேயாம்..

கடைசியில் கழுதையே வாய் திறக்க வேண்டியிருந்தது.  (எண். 22:22-35)

 

அதன்பின்பும் தேவனுக்குச் செவிசாய்க்காதே போனதன் விளைவு,

வாள் வேலை செய்தது !! யோசு. 13:22

 

கிருபையின் காலத்தில் இருக்கிறோம்.

வசனத்திற்கு மாத்திரம் செவி சாய்ப்போம்.

 

அதுவே முக்கியம். அதுவே பிரதானம். அதுவே நித்தியம்.

 

தொழுகையிலும் வாழ்க்கையிலும் எப்படி நடக்கவேண்டும் என்று தெளிவாய் வேதத்தில் சொல்லிக்கொடுத்திருந்தும்;

சுய இஷ்டத்திற்கும் சுய விருப்பத்திற்கும் செவி சாய்த்து அதன்படியே நடக்க முற்பட்டால் கழுதையை போல கத்தினாலும் வாள் போல கூர்மையாய் எடுத்துச்சொன்னாலும் சுயத்தில் நிலைத்தால் பிலேயாமைப் போல நாமும் தண்டனைக்குத் தப்பமுடியாது.

 

மனுஷனை அல்ல,

காலத்திற்கு அல்ல,

உணர்ச்சிகளுக்கு அல்ல,

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கூட்டத்திற்கு அல்ல,

கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டு பரிசுத்த ஆவியானவரால் நமக்கு எழுதிவைக்கப்பட்ட கட்டளைகளுக்கு செவிசாய்க்கவேண்டியது மாத்திரமே அவசியம்.

 

சடங்குகளும், சம்பிரதாயங்களும், உணர்ச்சிகளும், சுய பிரயாசங்களும் நம்மை பரலோகம் கொண்டு சேர்க்காது.

 

மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல்,

கிறிஸ்துவின் ஊழியக்காரராக,

மனப்பூர்வமாய்,

*தேவனுடைய சித்தத்தின்படி அதாவது அவரது வசனத்தின்படி* செய்யுங்கள். எபே. 6:6

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/AW9oIP9AK-g

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக