வியாழன், 17 பிப்ரவரி, 2022

உபவாசத்தின் பெயரில் வசூல்

*உபவாசத்தின் பெயரில் வசூல்*

by : Eddy Joel Silsbee

 

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

இயேசு கிறிஸ்து 40 நாள் இரவும் பகலும் *ஒன்றுமே சாப்பிடாதிருந்தார்* லூக். 4:2

 

எந்த மனிதனாலும் மூன்று அல்லது மிஞ்சினால் நான்கு நாட்களுக்கு மேல் வாயினுள் தண்ணீரோ, ஆகாரமோ என்று எதையாவது உட்கொள்ளாமல் இருக்கவே முடியாது. இல்லையெனில் படுத்தப் படுக்கையாகிப் போவார்கள்.

 

இயேசுவை போல நாங்களும் 40 நாள் உபவாசம் இருக்கிறோம் என்று இயேசு கிறிஸ்து செய்யாத செயலான:

ஜூஸ் மாத்திரம் குடித்துக் கொள்வது,

பால் மாத்திரம் குடித்துக் கொள்வது அல்லது

ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டு கொண்டு 40 நாளை உபவாச நாளாகக் கழிக்க தீர்மானிக்கிறார்கள்.

 

அப்படியிருப்பது உபவாசம் அல்ல. அதன் பெயர் diet என்பது அல்லது *ஆகாரத்தில் தன்னை ஒடுக்கி கொள்வது*.

 

இயேசுவைப் போல 40 நாள் உபவாசம் என்பது எவராலுமே முடியாத காரியம்.

 

தனது போதனைகளையே கடை பிடிக்கச் சொன்னார் கிறிஸ்து !!

 

அதைவிட்டு,

அவரை போல 40நாள் உபவாசம் இருக்கவோ,

சிலுவையில் அவரை போல அறைந்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ளவோ சொல்லவில்லை.

 

பெரிதான பதாகைகளை அடித்து

உபவாச ஜெபம்,

உபவாச மேளா,

உபவாச ஆராதனை,

21 நாள் உபவாசம்,

ஒரு வார உபவாசம்,

ஓய்வு நாள் உபவாசம் என்ற விளம்பரங்களுடன் இக்கால கிறிஸ்தவமதக் கம்பெனிகள் கூட்டங்களைக் கூட்டி காணிக்கை வசூலித்து வசூல் வேட்டையில் சக்கைபோடு போடுகிறது.

 

மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உங்கள் பிதாவுக்கே காணப்படும்படியாக, தலைக்கு எண்ணெய் பூசி,  முகத்தைக் கழுவி உற்சாகமாய் இருங்கள். அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உங்கள் பிதா வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். (மத் 6:17-18) என்கிறது வேதம்.

 

மணவாளன் கூடவேயிருக்கும் போது உபவாசிக்கமாட்டார்கள் என்று கிறிஸ்து சொன்னார். மாற்கு 2:19

 

உபவாசம் இருப்பதினால் தேவன் உங்கள் ஜெபத்தை கேட்கவேண்டும் என்ற நிர்பந்தத்தையோ அல்லது உபவாசம் இருப்பவரை அதிக நீதியுள்ளவனாக்கவோ செய்யாது (ஏசா. 58: 2-4; சகரி. 7: 5-6).

 

னது உபவாசம் மற்றவர்கள் பார்க்கக்கூடிய வகையில் இருக்கக் கூடாது என்று இயேசு எச்சரித்தார் (மத். 6: 16-18).

 

இது தனிநபருக்கும் தேவனுக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம்.

 

*உபவாசம் தேவைபடாத ஒரு காலம் வரும்* என்று சகரியா தீர்க்கதரிசனம் உரைத்தார் (சகரி. 8:19).

 

*இயேசு பூமியில் இருந்தபோது இது நிறைவேறியது*. (மத். 9: 14-15).

 

இருப்பினும், புதிய ஏற்பாட்டின் ஆரம்ப நாட்களில் உபவாசம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

சீஷர்கள் முக்கிய நிகழ்வுகள் அல்லது முக்கிய முடிவுகளுக்கு முன்பும் உபவாசம் இருந்திருக்கிறார்கள் (அப். 13: 2-3; 14:23).

 

ஆனால், குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டளையும் நிபந்தனையும் கிறிஸ்தவர்களுக்கு போதனையாகக் கொடுக்கப்படவில்லை.

 

தனிப்பட்ட எவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக உபவாசமிருக்க விரும்பினால் அது தனிப்பட்ட விஷயம். அதற்கான குறிப்பான எந்த தடையும் இல்லை.

 

உங்களது சொந்த கட்டுப்பாட்டிற்காக தேவனிடத்தில் ஊக்கமாய் ஜெபிக்க ஐம்புலன்களையும் ஒடுக்குவதற்கு பட்டினி உங்களுக்கு அவசியப்பட்டால் அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

 

புதிய ஏற்பாட்டில் உபவாசம் என்ற வார்த்தைக்கு ஆழ்ந்து ஜெபித்தல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/aJ1ArLSabHc

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக