புதன், 16 பிப்ரவரி, 2022

கிறிஸ்துவில், கிறிஸ்துவின் மேல், கிறிஸ்துவுக்குள்

*கிறிஸ்துவில், கிறிஸ்துவின் மேல், கிறிஸ்துவுக்குள்*

by : Eddy Joel Silsbee

 

மூலைக்கு தலைக்கல்லான, அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

இக்காலங்களில் பலர், யெகோவா ஷம்மா, யெகோவா ரூவா,

யெகோவா சிட்கேனு என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள்.. இவை தேவனுடைய பெயர்கள் அல்ல. அது அவருடைய தன்மை என்பதை கடந்த 20 நாட்களாக இப்படிப்பட்ட பிரபலமான வார்த்தைகள் ஒவ்வொன்றாய் அறிந்தோம்.

 

நமது பெற்றோர் நமக்கு பெயர் வைத்தது போல பெரியவரே சிறியவருக்கு பெயர் வைப்பர் (எபி. 7:7). தன்மையைக் கொண்டு சமுதாயம் பட்டபெயர் வைத்து அழைக்கும்.

 

பிதாவாகிய தேவனுக்கு மேலே எவரும் இல்லை... அவருக்கு யார் பெயர் சூட்டுவது? ஆகவே, அவர் மோசேயிடம் ”நானே நான்” என்றார்.. தமிழ் வேதாகமத்தில் “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

ஆங்கிலத்தில் அழகாக இருக்கும்... I'm who I'm.

 

ஆகவே, தேவனுடைய தன்மையைக் கொண்டு அவரை அழைத்தார்கள். இவைகள் மனனம் செய்வதற்கல்ல.. அந்த வார்த்தைகளுக்கும், தமிழ் அர்த்தத்திற்கும், தேவனுடைய தன்மைக்கும் உள்ள தொடர்பை அறியவே கடந்த 20 நாட்களாக தியானித்தோம்.

 

பின்வரும் சந்ததிக்கு எழுதி வைப்பது நமது கடமை.

 

அவருடைய தன்மை இவ்வளவு தான் என்று யார் பட்டியலிடமுடியும்? அதற்கு முடிவே இல்லை…

 

*இன்றைய சிந்தனை*

மரம் வளமாய் வளரவேண்டுமெனில் சத்துள்ள மண்ணும், நீரும் ஆகிய இரண்டுமே அவசியம் என்பது தெரிந்ததே.

 

ஒன்று நன்றாய் இருந்தாலும் மற்றொன்று சரியில்லை என்றால் நஷ்டம் தான். 

 

அதுபோல விசுவாசத்தை உறுதியாய் பற்றிக்கொண்டு கிறிஸ்துவின் உபதேசத்தில் நடக்கவில்லையென்றால் அங்கியும் தாடியும் வைத்துக்கொண்டாலும், அந்நிய பாஷையும், தேவன் பெயரில் கவர்ச்சிகரமான பிரசங்கங்களும், ஜெபங்களும், மேடை அலங்காரங்களும் எல்லாமே வீணாகிவிடும்.

 

கிறிஸ்துவின் கட்டளையின்படி சரியாகக் கீழ்ப்படிவது மட்டுமே நித்தியத்தை அடைய உதவும்.

 

சரியானவற்றை பின்பற்ற இன்றும் கூட நமக்கு ஜீவன் கிருபையாய் கொடுக்கப்பட்டிருக்கிறது !!

 

கிறிஸ்தவன் –

*கிறிஸ்துவில்* வேர்கொண்டு,

*கிறிஸ்துவின் மேல்* கட்டப்பட்டு,

*கிறிஸ்துவுக்குள்* நடந்தாலேயன்றி சீர்பட முடியாது. (கொலோ. 2:4-7)

 

நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்கள்... கொலோ. 3:23

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/a6U4Pf9CUOY

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக