திங்கள், 14 பிப்ரவரி, 2022

ஏல் க்கூவ்ள்

*ஏல் க்கூவ்ள்*

by : Eddy Joel Silsbee

 

ஜீவனை நமக்கு தந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எபிரேய வார்த்தைகளில் தேவனுடைய தன்மையை பார்த்து வருகிறோம். இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.

 

இன்று பார்க்கும் வார்த்தை : *ஏல் க்கூவ்ள்*

 

தமிழ் அர்த்தம் : உனக்கு ஜீவனை தந்த தேவன்.

 

மொழிபெயர்க்கப்பட்ட பதத்தில் / ஒருங்கிணைந்த அர்த்தத்தில் 58 முறை பழைய ஏற்பாட்டில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பு வசனங்கள் : ஏசா. 43:1-3, சங். 139:13-18, உபா. 32:18

 

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன். ஏசா. 43:1-3

 

நான் உன்னைப் படைத்தேன், உன்னைக் காப்பாற்றினேன், நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார் தேவன்.

 

தேவன் நம்மை ஒரு நோக்கத்திற்காக உருவாக்கியுள்ளார். அவர் நம்மைக் கவனித்துக் கொள்கிறார்.

 

பாவமானது தேவனுடைய உண்மையான படைப்பை சிதைத்தபோதும், "நான் அதை கொன்றுபோட்டேன்" என்று தேவன் சொல்லாமல், பாவம் செய்த நம்மை அவர் மன்னித்து நமக்கு மீண்டும் ஜீவனைத் தந்து நம்மை அவருடன் இருக்கும்படிக்கு நம்மை தமது குமாரனைத் தந்து மீட்கிறாரே… அவரது அன்பிற்கு ஈடு இணையேது?

 

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நாம் நிலைநிற்போம்..

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/bbOYhbD80j4

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக