*ஏல் கிபோர்*
by : Eddy Joel Silsbee
மாட்சிமை நிறைந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எபிரேய வார்த்தைகளில் தேவனுடைய தன்மையை பார்த்து வருகிறோம். இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.
இன்று பார்க்கும் வார்த்தை : *ஏல் கிபோர்*
தமிழ் அர்த்தம் : எல்லாம் வல்ல தேவன் / சர்வ வல்லமையுள்ள அல்லது பராக்கிரமமுள்ள தேவன்
ஏறத்தாழ 159 முறை மொழி பெயர்க்கப்பட்ட பதத்தில் காண முடிகிறது.
ஏல்-கிபோர்: “வல்லமையுள்ள/ பராக்கிரமமுள்ள கடவுள்”
ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே, யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன. எரே. 32:17-19
ஏல் கிபோர் என்பது கடவுளை ஒரு வலிமைமிக்க போர்வீரன் மற்றும் வெற்றியாளன் என்று விவரிக்கிறது. அவர் எப்பொழுதும் மேலோங்குகிறார். பெரும் வலிமை மற்றும் அதிகாரம் கொண்டவர்.
உருவாகியிருக்கும் அனைத்தையும் அவரே தனது வார்த்தையால் படைத்து உருவாக்கினவர்.
எகிப்துக்கு எதிராக பத்து வாதைகளை வரவழைத்து, அவருடைய மக்களை விடுவித்தது அவருடைய வல்லமையான கரம்.
இன்று நம் வாழ்வில் ஏற்படும் பெரும் பிரச்சனைகளிலும் கடவுளை நம்பலாம் அல்லது அவரை மாத்திரமே நம்பமுடியும் என்பதை சில நேரங்களில் மறந்து விடுகிறோம்.
அவர் என்றும் வல்லமையுள்ள தேவன். நம்மை விடுவிப்பார்!
“கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்." சங்கீதம் 18:2
சில குறிப்பு வசனங்கள் : ஏசா. 9:6, 45:24-25; சங். 45:3, 45:6, 50:1; எரே. 23:5-6;
*சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக*. யோ. 14:27
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/a0zovCh1Fpo
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக