ஞாயிறு, 9 ஜனவரி, 2022

சரியான பாதையை முதலில் தீர்மானிக்கவேண்டும்

*சரியான பாதையை முதலில் தீர்மானிக்கவேண்டும்*

by : Eddy Joel Silsbee

 

தேவனுடைய குமாரனா நமது ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தேவ நீதியை நிறைவேற்றும்படி இயேசு கிறிஸ்து தன்னை ஞானஸ்நானதிற்கு ஒப்புக்கொடுத்தார்.

 

வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என்னுடைய நேச குமாரன் என்று ஒலித்தது. மத். 3:17

 

ஆவியானவரே இந்த நேசகுமாரனை வனாந்திரத்திற்கு கொண்டுபோனார். நாற்பது நாள் கழிந்தபோது இவருக்கு பசி உண்டாகிறது. லூக். 4:1-2

 

இப்போது,

சந்தேகத்தைக் கிளப்பிவிட பிசாசு எதிரேவருகிறான். ஞானஸ்நானம் எடுத்தபோது “என்னுடைய நேசகுமாரன்” என்ற பரத்திலிருந்து வந்த அந்த உறுதிமொழி இன்னமும் உள்ளதா அல்லது மாறிப்போனதா என்ற சந்தேகத்தை கிளப்புகிறான்… நீர் தேவனுடைய குமாரன் தானோ என்று? தன்னை ஒரு முறைகூட சரிபார்த்துக்கொள்ள சொல்கிறான் அவன். (மத். 4:3, 4:6) ஆசை வார்த்தைகளால் முயற்சித்தான்.

 

ஏவாளிடம் கேள்வியை கேட்டு அவளை குப்பி ஜெயங்கண்ட பிசாசு, இயேசு கிறிஸ்துவினிடத்தில் தோற்றுப் போனான். ஆதி. 3:1-5

 

வாழ்க்கையாகட்டும், கர்த்தரின் ஊழியமாகட்டும் அல்லது வேலை ஸ்தலமாகட்டும் *சந்தேகப்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியாது*. 

 

நாம் தேவனுடைய பிள்ளையென்றாலும் கஷ்டமும் போராட்டங்களும் நிந்தைகளும் அவமானங்களும் கசையடிகளும் கஷ்டங்களும் நெருக்கங்களும் வரும். ரோ. 8:35-37

 

தன்னை இந்த ஜனங்கள் சிலுவையில் தொங்கவிட்டபோது கூட பிதாவின் சித்தத்தையே நிறைவேற்றி நமக்கு பாடத்தை கற்றுக்கொடுத்தார். பிலி. 2:8

 

ஆகவே, வாழ்வில் கேட்டு பற்றிக்கொண்டதையல்ல;

1-கிறிஸ்துவை அறிந்தபின்னர் (அப். 15:7)

2-அவரையே நம்பி (எபி. 11:6)

3-பழையதை மறந்து மனந்திரும்பி புதியதை பற்றிக்கொண்டு (லூக். 13:3)

4-பாவத்தையல்ல விசுவாசத்தை அறிக்கையிட்டு (மத். 10:32)

5-பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றவர்கள் (மாற்கு 16:16)

எச்சூழ்நிலையிலும் உண்மையான விசுவாசத்தில் நிலைத்திருக்கவேண்டும். (யோ. 15:4)

 

மேலேயுள்ள ஐந்து வரிசையின்படி ஞானஸ்நானம் எடுக்கவில்லையென்றால் தாமதிக்காமல் முதலாவது அதை முறையாய் பெறுவது அவசியம்.

 

இல்லையெனில், எவ்வளவு வைராக்கியமாய் வாழ்ந்தாலும் கிறிஸ்துவின் நியாயதீர்ப்பில் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கே நீ முறையாக கீழ்படியவில்லையே என்று நிராகரிக்க நேரிடும். வைராக்கியமாய் வாழ்ந்த  அத்தனையும் வீணாகிவிடும்.

 

அடிப்படையை முதலாவது சீர்படுத்துவோம். மற்றவை அனைத்தும் தானாக வரும் !!

 

தனது பாதையை முறையாய் அறிந்திருந்ததாலேயே பிசாசை கிறிஸ்து வென்றார். நாமும் அவனை வெல்லவேண்டுமென்றால் கிறிஸ்துவைப் முறையாய் பின்பற்றுவோம்.

 

மாற்றுக்கருத்தே இல்லை...

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/kHyOks5tYxY

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக