புதன், 26 ஜனவரி, 2022

என்னைவிட அவர் மேல்

*என்னைவிட அவர் மேல்*

by : Eddy Joel Silsbee

 

தேவனுடைய ரூபமாயிருந்தும் முழுவதுமாய் தன்னை தாழ்த்தின கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். 

 

மற்றவரை காட்டிலும் எப்போதும் *தானே மேலோங்கி* இருக்க வேண்டும் என்று நினைப்பது மனிதர்களின் சுபாவம்.

 

உங்களை போலவே அவரும் ஊழியம் செய்கிறார் என்று யாராவது சொல்லிவிட்டால் போதும்;

சரமாரியாக மற்றவரின் குறைகளை அடுக்கி வைத்து அவரை காட்டிலும் தான் மேன்மையாக ஊழியம் செய்வதாக தனது ஊழியத்தை நிரூபிக்க முயல ஆரம்பித்துவிடுவார்கள்.

 

மறுபக்கம் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் கொடுத்து வருகிறாரே (யோ. 4:3) என்று யோவானிடத்தில் வந்த சீஷர்கள் கேட்டபொழுது யோவான் சொன்னதை கவனியுங்கள் *”அவர் பெருக நான் சிறுகவேண்டும்”* என்றார் !! (யோ. 3:26-36)

 

இப்படிப்பட்ட தாழ்மை நமக்கு மேலான பாடம் !!

தாழ்மையாய் இருக்க பழகுவோம்.

 

தவறான காரியத்தை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.

 

அதே நேரத்தில் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதும் நல்லவைகளைப் பாராட்டவேண்டியதும் அவசியம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/I_1dKXFaTAU

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக