செவ்வாய், 25 ஜனவரி, 2022

புதிய காலையில் பழைய கசப்பு வேண்டாம்

*புதிய காலையில் பழைய கசப்பு வேண்டாம்*

by : Eddy Joel Silsbee

 

தேவ கிருபை நம்மை ஆள்வதாக.

 

இது சரியில்லை, அது பிடிக்கவில்லை என்று எப்போதும் கஷ்டங்களையும், சுயகற்பனைகளையும் பிணைத்து வைத்தால்;

மிஞ்சுவது கோபமும், வெறுப்பும், ஏமாற்றமுமே.

 

தனது புலம்பலை ஒரு புத்தகமாகவே எழுதிய எரேமியா தீர்க்கன் கூட, *புதிய* காலையில் *புதிய* கிருபை என்று நினைவு கூறுகிறார். புலம்பல் 3:23

 

நாம் செய்த கொடுமையான தவறுகளை கூட தேவன்

*மன்னித்து மறந்து புதிய கிருபையை கொடுக்கும் போது*,

நாமோ போட்டி, பொறாமைகள், வீண் கற்பனைகளை வளர்த்து ஒருவருக்கொருவர் விரோதிக்கிறோம் !!

 

நமக்கு முன்பாக தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துவிடாதபடி தந்திரக்காரனான பிசாசு இருதயத்தின் எண்ணங்களை பிணைத்து விடுகிறான்.

 

நேற்றைய கசப்பு கடந்த இரவோடு போகட்டும்.

 

புதிய நாளில் புன்முறுவலோடு அன்பை வெளிப்படுத்துங்கள்.

 

நற்குணமே நறுமணமாக நம்மில் வீசினால் அதை சுவாசித்து நாம் உணரமுடியும் !!  மற்றவரிடமிருந்து வரட்டும் என்று எதிர்நோக்கினால் அவர்களிடம் நறுமணம் இருந்தாலும், நம்மிலிருக்கும் அழுக்கு நமக்கு நாற்றத்தையே தரும் !!

 

அனைவருடனும் சந்தோஷமாயிருப்போம். அவர்களுடனுள்ள கசப்புகளை களைந்தால் சுய இருதயம் சுத்தமாகும் !!

 

தேவனிடத்தில் முழுவதுமாய் தாழ்த்தி ஒப்புகொடுத்தல் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் வருவிக்கும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/7LbG1osEu48

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக