திங்கள், 24 ஜனவரி, 2022

வாய் அல்ல - நல்ல கைகளே அதிக மரியாதையை ஈட்டும்

*வாய் அல்ல - நல்ல கைகளே அதிக மரியாதையை ஈட்டும்*

by : Eddy Joel Silsbee

 

சாந்த சொரூபியாகிய நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கூப்பாடு போட்டு,

ஆரவாரம் செய்து,

சதா மற்றவரைக் குற்றம் சொல்லி,

சப்தம் போட்டுக்கொண்டு,

தகாத வார்த்தைகளால் பேசி,

தலை நிமிர்ந்த போக்கோடும்,

எவரிடமும் சகஜமாக பேசுவதை தவிர்த்து,

இடைவெளியை காத்திருந்தால் இவ்வுலகத்தில் மரியாதை என்று;

சதா ஏதாவது ஒன்றின் மூலம் தன் நிலையை பரப்பி கொண்டே இருப்பார்கள் சிலர்.

 

ஆனால்,

செய்ய வேண்டிய காரியத்தை செவ்வனே செய்து முடித்தால்;

டமாரம் அடிக்காமலேயே நமது உண்மையான செயலுக்குரிய பங்கை ஆண்டவர் பரலோகத்திலிருந்து நமக்கு அனுப்பி வைப்பார்.

 

அதைவிட்டு நமது செயலுக்கு நாமே முயற்சி செய்தாலும் அல்லது மனுஷர் தயவை நாடினாலும் *தேவன் ஒதுங்கி நிற்பார்*. ஏசா. 47:12

 

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்;

அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். மத். 5:5

 

ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொருமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்க வேண்டியது கிறிஸ்தவருக்கு அவசியம். தீத்து 3:2

 

அறிவாளியாகவும் விவேகியுமாயிருக்க விரும்பினால், பொருமையாய் தனது கிரியைகளில் மாத்திரம் கவனம் செலுத்தவேண்டும். யாக். 3:13

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/JxjnK-5Q1RM

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக