சனி, 22 ஜனவரி, 2022

செழிப்பான களைகள்

*செழிப்பான களைகள்*

by : Eddy Joel Silsbee

 

சுவிசேஷத்தின் மூலாதாரமான நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

படித்ததை சொந்த வாழ்க்கையில் *பின்பற்றுவதைக் காட்டிலும், மற்றவரை திருத்துவது* எல்லோருக்கும் எளிது.

 

இரட்சிக்கப்படாமலிருக்கும் ஜனங்களை பாராமல்;

மனம் கடினப்பட்டு,

சத்தியம் அறிந்தும்,

வரட்டு வைராக்கியத்துடன்,

கீழ்படியாமல் இருப்பவர்களிடம்;

*தன் நேரத்தை கிறிஸ்தவன் வீணடித்துக்கொண்டிருக்கிறான்* என்ற ஐயம் இருக்கிறது.

 

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.  யாக். 5:20

 

சத்தியத்தை கேட்கும் போது அதற்கு சடுதியில் செவிசாய்த்து கீழ்படிந்து அதை பற்றிக்கொண்டு பின்பற்றுவது உத்தமம்.

 

உணர்ந்தவர்கள் அந்த நேரத்தில் தானே,

நள்ளிரவாயினும் உடனடியாக கீழ்படிந்தார்கள் !! அப். 16:33

 

கேட்டதும் படித்ததும் வேதத்தின்படி கிறிஸ்தவத்திற்கு சொல்லப்பட்டது உண்மையென்றால் சொந்த கோட்பாட்டையும் பாரம்பரியத்தையும் உதறிபோட்டு வசனத்திற்கு அப்படியே கீழ்படிவது முக்கியம்.

 

எவையெல்லாம் தவறு என்று வசனத்துடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தும்;

அதை சுய வாழ்வில் செயல்படுத்தாமல் தொடர்ந்து மறைமுகமாகவும், சபை ஜனங்களுக்காகவும், ஊருக்காகவும் வாழ்ந்தால் – நித்தியம் தொலைந்து போக வாய்ப்புள்ளது. மத். 19:22

 

செழித்தோங்கி வளர்ந்திருந்தாலும் கோதுமையல்ல களையே என்பதை மறக்கவேண்டாம். சத்தியத்திற்கு கீழ்படிவோம்.

 

கோதுமையை விட களைகள் மிக அதிகமாகவும் வேகமாகவும் வளரும்… அறுப்பு வரை எஜமான் அதை ஒன்றுமே செய்வதில்லை…. *நாம் தான் ஏமாறாமல் இருக்கவேண்டும்* !! மத். 13:29

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/eGBPuJatTcY

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக